திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விக்ரமின் மனைவி செய்த செயலால் அதிர்ந்த பாலா.. கண்ணீரில் மிதக்க விட்ட படம்

தமிழ் சினிமாவில் மிரட்டலான கதை, வித்தியாசமான கதாபாத்திரம் என்று பல அதிரடி திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் பாலா. இவரின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பாலா சேது திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

விக்ரம், அபிதா, சிவகுமார் மற்றும் பலர் இணைந்து நடித்த இந்த திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படமாகும். அதிரடியான நாயகன், அமைதியான நாயகியின் காதலுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகள், அதனால் ஹீரோ மனநலம் பாதிக்கப்படுவது போன்ற எதார்த்தமான கதையை பாலா மிகவும் சிறப்பாக கொடுத்திருப்பார்.

மேலும் சிறந்த படத்திற்கான தேசிய விருது, தமிழக அரசின் விருது, பிலிம்பேர் விருது போன்ற பல விருதுகளை குவித்த இந்த திரைப்படத்திற்கு பின் பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. அதாவது இந்த படத்தில் விக்ரமுக்கு முன்பு நடிக்க இருந்தது நடிகர் விக்னேஷ். அவர் இயக்குனர் பாலாவின் நெருங்கிய நண்பர் ஆவார்.

சில காரணங்களால் சேது படத்தில் விக்னேஷுக்கு பதில் விக்ரம் நடித்தார். மேலும் சேது படத்திற்கு முதலில் அகிலன் என்றுதான் பெயர் வைத்தார்களாம். ஆனால் கடைசி நேரத்தில் சேது என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து படம் பல பிரச்சனைகளுக்கு நடுவில் வெளியானது.

அப்படியும் படத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் தமிழ்நாட்டில் ஒரே ஒரு தியேட்டரில் மட்டும் சேது படம் திரையிடப்பட்டது. பின்பு விக்ரமின் மனைவி சைலஜா தன்னுடைய சொந்த காசை போட்டு படத்திற்கான பிரமோஷன் செய்தார். அதன் பிறகே படம் பலராலும் கவனிக்கப்பட்டு வரவேற்பு பெற்றது.

அதைத் தொடர்ந்து சேது திரைப்படம் பல சாதனைகளை படைத்தது. இன்றும்கூட தமிழ் சினிமாவில் இந்த படத்திற்கு ஒரு முக்கிய இடம் உண்டு. அது வரை கவனிக்கப்படாத நடிகராக இருந்த விக்ரம் இந்த படத்தின் மூலம் சீயான் விக்ரம் ஆக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இப்படம் அவருக்கு மட்டுமல்லாமல், இயக்குனர் பாலாவுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. தற்போது விக்ரம் மற்றும் பாலா இருவரும் ஒரு ஹீரோவாகவும், இயக்குனராகவும் சாதித்து தமிழ் சினிமாவில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளனர்.

Trending News