ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கசான்கான் மிரட்டிய 5 சூப்பர் ஹிட் படங்கள்.. விஜயகாந்துக்கு பயத்தை காட்டிய சேதுபதி வில்லன்

Villan Actor Khasankhan: தமிழ் சினிமாவில் வெளிவரும் அனைத்து படங்களிலும் நடிகர்களுக்கு இணையாக சில வில்லன் கேரக்டர்கள் பெரிய அளவில் பேசப்படும். அதனாலையே பெரும்பாலான நடிகர்கள் வில்லன் கேரக்டர்களில் நடிக்க ஆசைப்படுவார்கள். அப்படித்தான் மலையாள நடிகரான கசான்கான் தமிழில் 50 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். ஆனால் இவர் அதிகமாக நடித்தது நெகட்டிவ் ரோலில் வில்லன் கதாபாத்திரம் தான். இவருடைய சிறந்த ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

செந்தமிழ் பாட்டு: பி வாசு இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு செந்தமிழ் பாட்டு திரைப்படம் வெளிவந்தது. இதில் பிரபு, சுகன்யா, கஸ்தூரி, சுஜாதா மற்றும் கசான்கான் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கசான்கான், பூபதி என்ற கேரக்டரில் தமிழில் அறிமுகமான முதல் படம். இவர் நடித்த முதல் படத்திலேயே வெறித்தனமான வில்லன் கேரக்டரிலும் கிட்டத்தட்ட சைக்கோவாகவும் இவருடைய கேரக்டரை வெளிப்படுத்தி நடித்திருப்பார்.

Also read: விஜயகாந்த் பெயர் சொன்னதால் வாய்ப்பு தர மறுத்த வடிவேலு.. தூக்கிப் போட்டு மிதித்து இருப்பேன்!

சேதுபதி ஐபிஎஸ்: பி வாசு இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு சேதுபதி ஐபிஎஸ் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், மீனா, ஸ்ரீவித்யா மற்றும் கசான்கான் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சிவப்பிரகாஷ் மற்றும் சாந்தாராம் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். இதில் ரொம்பவே கொடூரமான வில்லனாகவும் அந்த காலத்திலேயே இப்படியெல்லாம் ஒரு கேரக்டர் இருக்குமா என்று 90ஸ் கிட்ஸ் ரொம்பவே பார்த்து பயந்த வில்லன்.

என் ஆசை மச்சான்: ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு என் ஆசை மச்சான் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், முரளி, ரேவதி, ரஞ்சிதா மற்றும் காசான்கான் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ரஞ்சிதாவின் முறை மாமனாக காசான்கான் இருப்பார். அதனால் ரஞ்சிதாவை காதலிக்கும் முரளியை பழிவாங்க வில்லத்தனமாக இவருடைய செயல்கள் இருக்கும்.

Also read: ஏக்கத்துடன் இருந்த வடிவேலுவை தூக்கி விட்ட விஜயகாந்த்.. நன்றியை மறந்து அசிங்கப்படுத்திய கொடுமை

பிரியமானவளே: கே செல்வ பாரதி இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு பிரியமானவளே திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், சிம்ரன், எஸ்பிபி, விவேக் மற்றும் கசான்கான் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் செவன் டைம்ஸ் என்ற கேரக்டரில் சிம்ரனின் முறை மாமனாக கசான் கான் நெகட்டிவ் ரோலில் நடித்தார். அத்துடன் விஜய் கம்பெனியில் மோசடி செய்யும் பிரச்சினையில் மாட்டிக் கொண்டதால் அவரை பழிவாங்க ஆக்சிடெண்ட் செய்து விடுவார்.

வல்லரசு: என் மகாராஜன் இயக்கத்தில் 2000ம் ஆண்டு வல்லரசு திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், தேவயானி, ரகுவரன் மற்றும் கசான்கான் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜயகாந்த் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடும் டிசிபி வல்லரசுவாக நடித்திருப்பார். இவருக்கு எதிராக தீவிரவாதி கும்பலாக இவருடைய கேரக்டர் இருக்கும்.

Also read: விஜய்யிடம் காரை பரிசாக வாங்கிய 4 பிரபலங்கள்.. ஓடாத படத்திற்கு இவ்வளவு பில்டப் தேவையா தளபதி

Trending News