இந்த வருடம் ஐம்பதில் 7 தான் நல்ல படங்கள்.. கடைசி நேரத்தில் தப்பித்த வீரதீர சூரன்

Vikram : இந்த வருடம் பெரிய படங்கள் எல்லாம் எதிர்பார்த்த அளவு வந்த நிலையில் ஆனால் எதுவும் சரியாக போகவில்லை. இதில் பெரும் அதிருப்தியை கொடுத்த படம் அஜித்தின் விடாமுயற்சி படம் தான்.

இந்த சூழலில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் என இந்த வருட தொடக்க மூன்று மாதத்தில் 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் நல்ல படங்கள் என்று கைவிட்டு என்னும் வகையில் ஏழு படங்கள் அமைந்திருக்கிறது.

பாலா, அருண் விஜய் கூட்டணியில் உருவான வணங்கான் படம் நல்ல கதை அம்சத்துடன் எடுக்கப்பட்டிருந்தது. அடுத்ததாக சுந்தர் சி மற்றும் விஷால் காம்போவில் வெளியான மதகத ராஜா படம் வெற்றி பெற்றது.

இந்த வருடம் நல்ல கதை அம்சம் கொண்ட ஏழு படங்கள்

ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியான காதலிக்க நேரமில்லை படம் தியேட்டரில் வரவேற்பு பெயரவில்லை என்றாலும் ரசிகர்களை கவர்ந்தது. அடுத்ததாக மணிகண்டனின் குடும்பஸ்தன் படம் சைலன்டாக வந்து வெற்றி பெற்றது.

பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் நல்ல வசூலை பெற்று திரையரங்குகளில் சக்கை போடு போட்டது. தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் தியேட்டரில் காலை வாரிவிட்டாலும் நல்ல படமாகத்தான் பார்க்கப்பட்டது.

லிஜோமல் ஜோஸ் மற்றும் புதுமுக நடிகர்களை வைத்து இயக்கிய ஜென்டில்வுமன் படம் நல்ல கதை அம்சமுள்ள படமாக எடுக்கப்பட்டது. இந்த ஏழு படமும் தான் இந்த ஆண்டு சொல்லிக் கொள்ளும்படி இருந்தது.

கடைசி நேரத்தில் தப்பித்த படங்கள் இரண்டு இருக்கிறது. அந்த வகையில் பெருசு படம் நேர்மையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்றது. அதோடு மார்ச் இறுதியில் விக்ரமின் வீரதீர சூரன் படம் வெளியானது. இந்த படமும் நடுநிலையான வெற்றியை அடைந்துள்ளது.

Leave a Comment

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்