Serial: ஜீ தமிழ் மூலம் செம்பருத்தி சீரியலில் நடித்து சின்னத்திரையை கலக்கிய சீரியல் நடிகை தான் ஷபானா. இந்த நாடகத்திற்கு பிறகு மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தார். கிட்டத்தட்ட அஞ்சு வருஷமாக கார்த்திக்கு ஜோடியாக நடித்த பார்வதி என்ற பெயரை மறக்க முடியாத அளவிற்கு அனைவரும் மனதிலும் ஒரு முத்திரையை குத்தி விட்டார்.
இவர்களுடைய ஜோடி சூப்பர் என்று தூக்கிக் கொண்டாடும் அளவிற்க்கு கெமிஸ்ட்ரியில் பிரபலமான ஷபானா சன் டிவி மிஸ்டர் மனைவி என்ற சீரியலுக்கு தாவினார். ஆனால் அந்த சீரியல் பிரேம் டைமிங்கில் கிடைக்காததால் எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடம் வரவேற்பு கிடைக்காமல் போய்விட்டது. அதனால் பாதிலேயே அந்த சீரியல் இருந்து விலகிவிட்டார்.
இதற்கு இடையில் சீரியல் நடிகர் ஆரியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவ்வப்போது இவர்களுடைய காதல் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். ஆனால் தொடர்ந்து ஆரியன் மட்டுமே சீரியலில் நடித்துக் கொண்டிருந்த பொழுது சபானா எந்த ஒரு புது சீரியலிலும் நடிப்பதாக தகவல் வெளிவரவில்லை.
செம்பருத்தி ஆக நுழைந்து மனைவியாக மாறிய ஷபானா
அதே நேரத்தில் ஷபானாவின் நெருங்கிய தோழியாக இருக்கும் சைத்ரா, நட்சத்திரா மற்றும் ரேஷ்மா அடிக்கடி 3 பேரும் சேர்ந்து புகைப்படங்களை எடுத்து வெளியிட்ட நேரத்தில் சபானா மட்டும் அதில் காணாமல் போயிருந்தார். இதனால் ரசிகர்கள் சபானா ஏன் எதிலும் கலந்து கொள்ளவில்லை என்று தொடர்ந்து கேள்விகளை எழுப்பினார்கள்.
ஆனால் தற்போது அதற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக சின்னத்திரை தாண்டி வெள்ளி திரையில் ஜொலிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் ரீல் பெட்டி தயாரிப்பில், மேரேஜ் ஸ்டோரி என்ற படத்தில் நடிப்பதற்கு ஹீரோயினாக கமிட் ஆகி இருக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகர் சித்தார்த் என்பவர் இணைந்திருக்கிறார்.
இதற்கான படபூஜை ஆரம்பித்த நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் விஜய் சேதுபதி இந்த படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு துவங்கி வைத்திருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக இன்னொரு படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டிருக்கிறது. அதனால் இனி சின்னத்திரையை சீரியல் மூலம் ஜொலித்து வந்த ஷபானா வெள்ளி திரையை கலக்கப்போகிறார்