செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

ஷாருக்கான் பட்ட கஷ்டம் வீண் போகல.. அட்லி அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக போட்ட 4வது நாள் வசூல்

Jawan Collection Report: தற்போது எங்கு திரும்பினாலும் ஜவான் பற்றிய பேச்சு தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் நாளிலேயே பெரும் வசூல் சாதனை படைத்தது. அதனாலேயே இப்போது அட்லி, ஷாருக்கான் கூட்டணி வெற்றி கூட்டணியாக பார்க்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் இதன் மூலம் அனைவரின் கவனத்தையும் திருப்பி இருக்கும் அட்லி தற்போது தன்னுடைய பாலிவுட் அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக போட்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது ஜவான் வெளியான 4 நாளிலேயே 500 கோடியை தாண்டி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

Also read: ரெண்டே நாளில் ஜெயிலர் படத்தை பின்னுக்கு தள்ளிய ஜவான்.. சுட்டு போட்டாலும் வெற்றியை தக்க வைக்கும் அட்லி

அதன்படி முதல் நாளில் 125 கோடிகளை உலக அளவில் வசூலித்திருந்த இப்படம் இரண்டாவது நாளில் 109.24 கோடிகளை தட்டி தூக்கி இருந்தது. அதை தொடர்ந்து வார இறுதி நாளிலும் படத்திற்கான வரவேற்பு அதிகமாகவே இருந்தது.

அந்த வகையில் மூன்றாவது நாளில் ஜவான் 140.17 கோடியையும், நான்காவது நாளில் 156.80 கோடியையும் வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது. ஆக மொத்தம் இந்த நான்கு நாட்களிலேயே இப்படத்தின் மொத்த வசூல் 531.26 கோடியாக இருக்கிறது.

Also read: அட்லீ – எங்கள பார்த்தா மெண்டல் மாதிரி இருக்கா.? பிசிரு தட்டாமல் 5 படங்களில் இருந்து காப்பியடித்த புகைப்பட ஆதாரம்

இது ஐந்தாவது நாளான இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதனால் தற்போது ஷாருக்கான் உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கிறாராம். இத்தனை நாள் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பல மடங்கு பலனை அவர் மகிழ்ச்சியாக அனுபவித்து வருகிறார்.

இதற்கு முன்னதாக அவருடைய பதான் ஆயிரம் கோடியை வசூலித்திருந்த நிலையில் ஜவான் அதை விரைவில் ஓவர் டேக் செய்துவிடும் என்று கூறப்படுகிறது. ஆக மொத்தம் லேட்டா வந்தாலும் வசூலில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது இந்த ஜவான்.

Also read: அட்லி, ஷாருக்கான் கூட்டணி தேறியதா.? ஜவான் 3 நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்

Trending News