திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

இது என்னடா ஷாருக்கானுக்கு வந்த சோதனை.. அட்லீயால் அரசனை நம்பி ஆண்டியான பரிதாபம்

Actor Sharukhan and Director Atlee: அட்லீ முதல் முறையாக பாலிவுட்டில் களம் இறங்கி ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இதில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

இப்படம் பான் இந்தியா படமாக உருவாக்கப்பட்டு தமிழ் ரசிகர்களிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். மேலும் ஷாருக்கான் மற்றும் அட்லீ இவர்கள் இருவரும் இப்படம் தமிழில் மிகப் பெரிய ஹிட் அடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார்கள்.

Also read: அட்லீ ஹிரோ பார்த்து மிரண்டு போன விஜய் சேதுபதி.. தலைகால் புரியாமல் ஆடிய தருணம்

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இவர்கள் இப்படத்தை ஜூன் 2 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் இன்று வரை இப்படம் முடிந்த பாடாக தெரியவில்லை. அதாவது கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் செப்டம்பர் 7ஆம் தேதிக்கு ரிலீஸ் செய்யலாம் என்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதனால் தற்போது அட்லீ போஸ்ட் புரொடக்ஷன், எடிட்டிங் வேலைகளில் பிஸியாக வேலை பார்த்து வருகிறார். ஆனாலும் இவர் செய்த காரியத்தால் கதி கலங்கி போய் நிற்கிறார் ஷாருக்கான். இவருடைய நிலைமையை பார்க்கும் பொழுது இது என்னடா ஷாருக்கானுக்கு வந்த சோதனை என்று சொல்லத் தோன்றுகிறது.

Also read: விஜய் பாணியில் ஷாருக்கான் செய்த விஷயம்.. ஜவான் படத்தை பற்றி அவரே சொன்ன அப்டேட்

எப்படிப்பட்ட ராஜாவாக இருந்தாலும் அட்லீ கையில் மாட்டிக் கொண்டால் ஆண்டியாகத் தான் போவார்கள் என்பதற்கு ஏற்ப, இவர் கொடுத்துள்ள பட்ஜெட்டையும் தாண்டி கண்ணா பின்னா என்று செலவு அதிகமாகப் போவதால் ஷாருக்கானை திண்டாட வைத்து வருகிறது.

மேலும் இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டுமே 250 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார். அப்படி என்றால் படத்தின் மற்ற செலவுகளின் பட்ஜெட் என்னவாக இருக்கும் என பாலிவுட்டை பதற வைத்திருக்கிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஷாருக்கான், பட்ஜெட்டை பற்றி எல்லாம் யோசிக்க முடியாது. விரைவில் ஜவான் படத்தை எடுத்து முடித்து வெளியிட்டால் போதும் என்று சைலன்ட் மோடில் இருக்கிறார்.

Also read: விஜய் அண்ணாவை புடிச்சி தொங்குனது போதும்.. ஷாருக்கான்-ஐ குருவாக ஏற்றுக் கொண்ட அட்லீ.!

Trending News