புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ஜவான் படத்தின் பிரீ பிசினஸ் இத்தனை கோடியா.? ஷாருக்கானின் படங்களில் இதுதான் பிரம்மாண்டம்

Jawaan Movie: கோலிவுட்டில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி போன்ற மூன்று சூப்பர் ஹிட் படங்களை தந்த இயக்குனர் அட்லி இப்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கிறார்.

இந்த படத்தின் பிரீ பிசினஸ் எவ்வளவு என்பது வெளிவந்து பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது. பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் ஷாருக்கான் நிறைய ஹிட் படங்களை கொடுத்தாலும், தமிழ் இயக்குனர் அட்லி உடன் இணைந்த ஜவான் படம் தான் அவர் இதுவரை நடித்த படங்களைக் காட்டிலும் பிரம்மாண்டமான படமாகும்.

Also Read: மூட்டை முடிச்சை கட்டிய அட்லீ.. ஷாருக்கான் விட்ட டோஸால் ஜவானுக்கு ஏற்பட்ட விடிவுகாலம்

தற்போது ஜவான் படத்தின் பிரீ பிஸ்னஸ் சூடு பிடித்திருக்கிறது. இந்த படத்தில் நான் தியேட்டரிக்கல் ரைட்ஸ் (Non Theatrical Rights) மட்டும் 250 கோடி வியாபாரம் ஆகி இருக்கிறது. அதுமட்டுமல்ல தமிழகத்தில் ஜவான் படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் தட்டு தூக்கி இருக்கிறது.

அதுமட்டுமல்ல ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களிலும் ஜவான் படத்தின் ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு கைப்பற்றி இருக்கிறார். எனவே வரும் செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீசாக இருக்கும் ஜவான் படத்தின் ப்ரோமோஷன் இனி வரும் நாட்களில் இந்திய அளவில் களைகட்டும்.

Also Read: லேடி சூப்பர் ஸ்டாரை இயக்கும் யூடியூபர்.. இணையத்தை கலக்கும் அடுத்த பட அப்டேட்

அதுமட்டுமல்ல இந்த படத்தின் டிரைலரும் விரைவில் வெளியாகப் போகிறது. படத்தின் இயக்குனர் அட்லி ஜவானின் டீசர் மற்றும் ட்ரெய்லரின் மூலம் நிச்சயம் இந்த படத்தின் ஹைப்பை அடுத்த லெவலுக்கு கொண்டு போய் விடுவார்.

தற்போது வெளியாகி இருக்கும் ஜவான் படத்தின் பிரீ பிசினஸ் அப்டேட் தான் சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. விரைவில் இதன் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல இந்த படம் ரிலீசுக்கு பிறகு பாக்ஸ் ஆபீஸ் மிரட்டும் அளவுக்கு வசூலை குவிக்கும் என்றும் யூகித்திருக்கின்றனர்.

Also Read: கோலிவுட் பெரிதும் எதிர்பார்க்கும் மற்ற மொழி 5 படங்கள்.. பல வருடமாக இழுத்தடிக்கும் அட்லீ

Trending News