பதான், ஜவான் 1000 கோடி வசூல் செஞ்சாச்சு.. ஷாருக்கானின் ஹாட்ரிக் வெற்றிக்கு ஆப் அடிக்கும் பிரபாஸ்

ShahRukhKhan-Prabhas: ஷாருக்கானுக்கு இந்த வருடம் சுக்கிர திசை அடித்தது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே ஷாருக்கான் நடிப்பில் பதான் படம் வெளியாகி இருந்தது. பாலிவுட் சினிமாவையே தூக்கி நிறுத்திய இந்த படம் கிட்டத்தட்ட 1000 கோடி தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது.

இதற்கு அடுத்தபடியாக சமீபத்தில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படம் வெளியாகி இருந்தது. அதுவும் 18 நாட்களிலேயே இப்படம் ஆயிரம் கோடியை நெருங்கி வசூல் வேட்டையாடி வருகிறது. இவ்வாறு தொடர்ந்து ரெண்டு படங்களும் ஆயிரம் கோடி வசூல் செய்த நிலையில் ஹட்ரிக் வெற்றி பெற இந்த மாதம் டிசம்பரில் ஷாருக்கானின் டன்கி படம் வெளியாகிறது.

இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்ஸி நடித்துள்ளார். இந்நிலையில் டிசம்பர் 22 இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இதற்கு போட்டியாக பிரபாஸின் சலார் படம் வெளியாகிறது. கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது. பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் தொடர்ந்து தோல்வி படங்கள் கொடுத்து வருகிறார்.

எனவே சலார் படத்தின் மீது பெரிதும் பிரபாஸ் நம்பிக்கை வைத்திருக்கிறார். இந்த சூழலில் ஏற்கனவே ஷாருக்கானின் ஜீரோ படம் பிரசாந்த் நீலின் கேஜிஎஃப் படத்துடன் ஒன்றாக வெளியானது. அப்போது ஜீரோ படம் தோல்வி அடைந்தது. அதற்கு அடுத்தபடியாக கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் விஜய்யின் பீஸ்ட் படம் படத்துடன் மோதியது.

அப்போதும் பீஸ்ட் படம் தோல்வியுற்ற நிலையில் கேஜிஎஃப் 2 படம் வசூலை வாரி குவித்தது. இவ்வாறு பிரசாந்த் நீல் படத்திற்கு ரசிகர்கள் தொடர்ந்து மிகப்பெரிய அளவில் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அதுவும் சலார் படம் வேற லெவலில் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால் அடுத்த ஆயிரம் கோடி வசூல் ஷாருக்கானால் பெற முடியுமா என்பது சந்தேகம்தான்.

மேலும் இந்த படங்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில் இதற்கு முன்னதாக தனுஷின் கேப்டன் மில்லர் படமும் வெளியாகிறது. இவ்வாறு ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகுவதால் வசூலில் பெரிய பாதிப்பு ஏற்படும்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →