ஷாருக்கானின் சில்மிஷத்தால் 4 வருடங்களாக இழுத்தடித்த ஜவான் படம்.. அட்லீயை வச்சு செய்த சூப்பர் ஸ்டார்

Actor Sharukhan and Atlee: தமிழ் சினிமாவின் சிறப்பே அவர்களுடைய கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம். நேரம், காலம் பார்க்காமல் தேனீ போல் சுறுசுறுப்பாக வேலை செய்யக் கூடியவர்கள். அதனால் தான் மற்ற மொழி படங்களை விட தமிழ் படங்களுக்கு எப்போதுமே ஒரு தனி மவுஸ் உண்டு.

ஆனால் அக்கடதேசத்து சினிமா காரர்களுக்கு இந்த ஒரு விஷயம் சுட்டு போட்டாலும் வராது. அதனால் தான் பாலிவுட்டில் இருக்கும் பலருக்கும் தமிழ் சினிமாவின் மீது எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. அதாவது வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போல் வேலை செய்யணும் என்பதற்கு ஏற்ப இரவு பகல் பார்க்காமல் உழைப்பை போடக் கூடியவர்கள் இங்கே ஏராளமானவர்கள்.

Also read: ரத்தமும் சதையுமாக ஒட்டி வரும் விஜய், அட்லீ.. இவங்க அலப்பறை கொஞ்சம் ஓவராக தான் போகுது போல

இந்த ஒரு பழக்கம் பாலிவுட்டில் கிடையாது. அதனால தான் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தமிழ் இயக்குனர் அட்லீயை கொக்கி போட்டு இழுத்திருக்கிறார். அவரும் நமக்கு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்ற சந்தோஷத்தில் போய்விட்டார். ஆனால் அங்க போய் பார்த்தால் தான் தெரியுது ஷாருக்கானின் அக்கப்போர்.

அதாவது ஜவான் படத்தை ஆறே மாதத்தில் முடித்திருக்க வேண்டியது. ஆனால் ஷாருக்கான் செய்த சில்மிஷத்தால் நான்கு வருடங்களாக இழுத்து அடித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணமே ஷாருக்கான் தான். என்னதான் படம் நடிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டாலும் முழு முயற்சியாக இதில் இறங்க மாட்டார்கள். அவர்கள் சூட்டிங் வருவதே இஷ்டப்பட்ட நேரத்தில் தான்.

Also read: நெல்சனை ஃபாலோ பண்ணும் அட்லீ.. விஜய்யால் அதிர்ந்த ஜவான் மேடை

முக்கியமாக இரவெல்லாம் பார்ட்டி பப் என்று சுற்றுவார்கள். பகலில் சூட்டிங் இருந்தால் மொத்தமே மூன்று மணி நேரம் தான் நடித்துக் கொடுப்பார்கள். பிறகு மறுபடியும் ஆறு மணிக்கு மேல் அவர்கள் என்ஜாய் பண்ணுவதற்கு நேரத்தை செலவழித்து விடுவார்கள். இதுல ஷாருக்கான் பற்றி சொல்லவா செய்யணும். அவர் பொதுவாகவே ஜாலியான ஒரு மனுஷன்.

அப்படிப்பட்ட இவர் மாதக்கணக்கில் சூட்டிங் வராமல் லீவு எடுக்கிறது, இரண்டு மணி நேரம் தான் சூட்டிங் வருவது என்று இஷ்டப்படி இருந்திருக்கிறார். இப்படி அட்லீயே மொத்தமாக வச்சு செய்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இதற்கிடையில் கொரோனா வேற படாதபாடு படுத்தி இருக்கிறது.எப்படியாவது இப்படத்தை முடித்தால் போதும் என்று அமைதியாக இருந்து காரியத்தை சாதித்து இருக்கிறார் அட்லீ.

Also read: அட்லீக்கு டிமிக்கி கொடுத்த விஜய்.. ரிஸ்க் எடுக்க வேண்டாம் என எஸ்கேப் ஆன தளபதி