திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

தள்ளி போகும் ஜவான் ஓடிடி ரிலீஸ்.. கோடிகளை கொட்டிக் கொடுத்து திண்டாடும் நிறுவனம்

Jawan Ott: அட்லியின் பாலிவுட் அறிமுகமே அமோகமாக தொடங்கி இருக்கிறது. ஷாருக்கான் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த ஜவான் ஆயிரம் கோடியை தாண்டி வசூலித்த நிலையில் அது எப்போது ஓடிடி தளத்தில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

அவர்களுக்கு இப்போது ஒரு அதிர்ச்சியான தகவல் காத்திருக்கிறது. அதாவது தியேட்டரில் படத்தை பார்க்காமல் ஓடிடி-க்கு வரட்டும் பாத்துக்கலாம் என வெயிட் செய்து வந்த ரசிகர்கள் இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

Also read: பதான், ஜவான் 1000 கோடி வசூல் செஞ்சாச்சு.. ஷாருக்கானின் ஹாட்ரிக் வெற்றிக்கு ஆப் அடிக்கும் பிரபாஸ்

பொதுவாக ஒரு படம் தியேட்டருக்கு வந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே டிஜிட்டல் திரைக்கு வந்துவிடும். ஜெயிலர் படம் கூட அப்படித்தான் வெளியானது. ஆனால் ஜவான் தயாரிப்பாளர் ஷாருக்கான் 45 நாட்கள் கழித்து தான் படத்தை வெளியிட வேண்டும் என்று கண்டிஷன் ஆக கூறிவிட்டாராம்.

இதனால் படத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனம் திண்டாடிக் கொண்டிருக்கிறது. எப்போதுமே டாப் ஹீரோக்கள் மற்றும் பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வரும் இந்த நிறுவனம் பல போட்டிகளுக்கு மத்தியில் ஜவானை 250 கோடி கொடுத்து கைப்பற்றி இருந்தது.

Also read: அட்லிக்கு ஒரு டார்லிங்னா, நெல்சனுக்கு ஒரு செல்லாகுட்டி.. கடுப்பில் இருக்கும் சிவகார்த்திகேயன்

அதனாலேயே ஒரு மாதம் ஆனவுடன் படத்தை வெளியிட்டு கல்லா கட்டலாம் எனவும் அவர்கள் பிளான் போட்டிருந்தனர். ஆனால் ஷாருக்கான் மொத்தத்திற்கும் இப்போது ஆப்பு வைத்திருக்கிறார். அந்த வகையில் அடுத்த மாத தொடக்கத்தில் அதாவது நவம்பர் 2ஆம் தேதி ஜவான் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.

கடந்த வாரமே வெளியாகி இருக்க வேண்டிய ஜவான் இன்னும் சில வாரங்கள் தள்ளி போனதில் ரசிகர்களுக்கு ஏக வருத்தம் தான். ஆனாலும் தியேட்டரில் பட்டையை கிளப்பியது போல் ஓடிடி தளத்திலும் இப்படத்திற்கு ஆதரவு குவியும் என்பதில் சந்தேகமே இல்லை. அதனால் சம்பந்தப்பட்ட நிறுவனமும் பொறுமையாக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: எங்க ஆளுங்களுக்கு ஒரு பிரச்சனா நான் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன்.. ஜவானை மிஞ்சிய கணபத் மிரட்டும் டீசர்

Trending News