திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அப்பாவை வைத்து கல்லாக்கட்டும் மகன்.. ஷாருக்கான் வாரிசுக்கு இப்படி ஒரு திறமையா?

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் தற்போது அட்லீயின் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ரிலீஸுக்காக ஷாருக்கான் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இதற்கு முன்னதாக ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி வசூல் சாதனை படைத்தது.

இப்போது ஷாருக்கானை வைத்து கல்லா கட்டியுள்ளார் அவரது மகன் ஆரியன் கான். இவர் கடந்த வருடம் பல சர்ச்சைகளில் சிக்கி கைதானார். இது பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய பிரளயத்தையே ஏற்படுத்தி இருந்தது. அதன் பின்பு ஆரியன் கான் என்ன செய்தாலும் அது இணையத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறி வருகிறது.

Also Read : பதான் பட்ஜெட்டையே சம்பளமாக வாங்கிய ஷாருக்கான்.. பதறிப்போன அட்லி பட தயாரிப்பாளர்

அந்த வகையில் அவர் செய்துள்ள ஒரு விஷயம் இப்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹர் பாலிவுட் சினிமாவில் வாரிசு பிரபலங்களை அறிமுகம் செய்து வருகிறார். அந்த வகையில் ஆரியன் கானையும் தன் படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க திட்டம் தீட்டி இருந்தார்.

ஆனால் ஆரியன் கான் நடிகர் ஆவதை காட்டிலும் ஒரு இயக்குனராக வேண்டும் என்பது தான் அவருடைய கனவாக இருந்து வருகிறது. அதன்படி இப்போது ஒரு ஆடை நிறுவனத்திற்கான விளம்பரத்தை ஆரியன் கான் இயக்கியிருக்கிறார். இந்த விளம்பரத்தில் ஷாருக்கான் தான் நடித்திருக்கிறார்.

Also Read : முதலில் கஜானாவை மொத்தமாக காலி செய்த அட்லீ.. ஜவானுக்கு கல்லா கட்ட நாள் குறித்த ஷாருக்கான்

அதுமட்டுமின்றி அந்த ஆடை நிறுவனத்தின் இணை நிறுவனங்களின் ஒருவர் ஆரியன் கான் தான். ஆகையால் தனது தந்தையை வைத்து தனக்கான நிறுவனத்தின் விளம்பரத்தை தானே இயக்கி இருக்கிறார் ஆரியன் கான். மேலும் ஷாருக்கானுக்கு இப்போது மார்க்கெட் உச்சத்தில் உள்ளது.

ஆகையால் பல பெரிய நிறுவனங்கள் அவரை விளம்பரத்தில் நடிக்க வைக்க போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கும் சூழலில் தனது அப்பாவை சரியாக பயன்படுத்திக் கொண்டு பெத்த லாபம் பார்க்க இருக்கிறார் ஆரியன் கான். மேலும் அடுத்ததாக புதிய படங்களை இயக்கும் வாய்ப்பும் இவருக்கு வந்து கொண்டிருக்கிறது.

Also Read : ஷாருக்கான் படத்தை காப்பி அடித்த அட்லி.. மேடையிலேயே ரோஸ்ட் செய்த தயாரிப்பாளர்

Trending News