ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான அட்லி, அதன்பிறகு தளபதி விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றிப் படங்களை கொடுத்து தற்போது முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் புகழ் ஏற்பட்டதால், இவரின் அடுத்த கட்ட முன்னேற்றமாக பாலிவுட்டில் ஷாருக்கான் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
ஷாருக்கானுக்கு ஜோடியாக இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சான்யா மல்கோத்ரா, சுனில் குரோவர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் பிரியாமணி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் தமிழ் திரையுலக நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்
இதில் ஷாருக்கான் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன் மும்பையில் தொடங்கியது. அதில் நயன்தாராவும் கலந்துகொண்டார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்தப்படத்தின் டைட்டில் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிறது.
இயக்குனர் அட்லி-ஷாருக்கான்-நயன்தாரா கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு லயன் என்று வைப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது படத்திற்கு ‘ஜவான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் டீஸர் வெளியீட்டிற்காக அத்தனை பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதற்கான சென்சார் பணிகளும் முடிந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் ஜவான் படத்தை முடித்துவிட்டு இயக்குனர் அட்லி மீண்டும் தளபதி விஜய்யின் படத்தை இயக்க இருப்பதாகவும், அது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தற்போது தளபதி விஜய் தனது 66-வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கிக்கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து தளபதியின் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்நிலையில் தளபதியின் 68-வது படத்தை அட்லி இயக்க அதிகம் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.