புதன்கிழமை, நவம்பர் 27, 2024

இங்கு எல்லாமே ஹரம்தான்.. என் பசியை போகாத மதம், தேவையற்றது.. ஷகீலா ஆவேசம்

தமிழ், மலையாளத்தில் 300க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து புகழ் வெளிச்சம் பெற்றவர் ஷகிலா. கவர்ச்சி நடிகை என்ற அடையாளத்துடன் இருந்த இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம், இவருக்கு இருந்த கவர்ச்சி நடிகை அடையாளம் மாறி, அனைவருக்கும் பிடித்த அம்மாவாக மாறியுள்ளார்.

இந்த நிலையில் அவர் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டி பலருக்கு புகைச்சலையும், அதே நேரத்தில் சிலர் பாராட்டியும் வருகின்றனர். அவர் கூறியதாவது, “சிறு வயதில் போலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசையில் இருந்தேன். அதற்கு தகுந்தாற் போல என் உடல்வாகும் இருந்தது. ஆனால் என் தந்தை சூதாட்டத்தில் ஈடுபட்டு குடும்பத்தை பொருளாதார நெருக்கடியில் தள்ளினார்.”

“பாலியல் கல்வி குறித்த படம் என என்னை அழைத்துச் சென்றவர்கள் தன்னை வேறுமாதிரியான படத்தில் நடிக்க வைத்தனர். பின். வாழ்க்கையில் பசி துரத்த நான் எனக்கு வந்த அடுத்தடுத்த படங்களில் நடித்தேன். என் பசியை போக்கவோ, என் குடும்பத்தின் பசியை போக்கவோ என் மதம் உதவவில்லை. அதனால், நான் என் உடலை பயன்படுத்தி நடித்து சம்பாதித்து என் குடும்பத்திற்கு கொடுத்தேன்”

“இதை நினைத்து நான் ஒரு நாளும் சிறுமையடைந்ததில்லை. சொல்லப்போனால் பெருமை தான் படுகிறேன். என்னால் என் குடும்பமும் பல குடும்பமும் பசி இல்லாம இருக்கின்றது. அப்படி இருக்க, நான் ஏன் நான் செய்த வேலையை நினைத்து சிறுமையடைய வேண்டும். நான் எத்தனையோ மலையாள படத்தில் நடித்துள்ளேன், ஆனால் நான் கவர்ச்சி காட்டி நடித்தது மட்டும் தான் வெளியில் தெரிந்தது. என்னுடைய அடையாளமாகவே அதை மாற்றிவிட்டனர்.”

இங்கு எல்லாமே ஹரம் தான்…

“என்னை கண்டாலே பெண்களுக்கு பிடிக்காது. அதை நினைத்து நான் கவலை பட்டதும் இல்லை. சில வருடங்களுக்கு முன்நான் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றபோது கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததால், என்னை புர்கா அணிந்து நிகழ்ச்சிக்கு வருமாறு வலியுறுத்தினர். அதற்கு நான் சம்மதம் தெரிவித்த போது, ‘சினிமாவில் கவர்ச்சியை காட்டிவிட்டு, இங்கு மட்டும் புர்கா அணிவீர்களா’ என பலரும் என்னை நோக்கி கேள்வி எழுப்பினர்.”

“அதனால் இன்று வரை நான் புர்கா அணியவே இல்லை. என் பசியை போகாத மதம், எனக்கு விதிமுறைகளை கற்று கொடுக்க தேவை இல்லை. இங்கு எல்லாமே ஹரம் தான். இஸ்லாம் மதத்தில் குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்றவை கூடத்தான் ஹராம். அதை இங்கு பலரும் செய்துகொண்டு தானே இருக்கிறார்கள். அப்படி இருக்க என்னை யார் வந்து கேட்பார்கள்” எனவும் கேள்வி எழுப்பினார்.

இவர் கூறிய இந்த கருத்துக்கள் ஒரு சிலருக்கு புகைச்சலையும், மேலும் ஒரு சிலரிடம் இருந்து ஆதரவையும் பெற்று வருகிறது.

- Advertisement -spot_img

Trending News