திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சரமாரியாக விட்டு விளாசிய ஷகிலா.. விஷத்தை கக்க முடியாமல் பல்லு புடுங்கிய பாம்பான பயில்வான்

நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பற்றி சோசியல் மீடியாவில் பேசியே பிரபலமானவர் தான் பயில்வான் ரங்கநாதன். ஒரு நடிகராக இவர் பிரபலமானதை காட்டிலும் இந்த விஷயத்தால் மட்டுமே இவர் இப்போது லைம் லைட்டில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இப்படி இவர் பேசும் விஷயங்களுக்கு எதிராக பலர் கொந்தளித்தாலும் இவர் தன்னுடைய இந்த சேவையை குறைவில்லாமல் செய்து வருகிறார்.

அந்த வகையில் இப்போது இருக்கும் நடிகைகளிடம் இவர் வாங்காத திட்டே கிடையாது. அவ்வளவு ஏன் ரேகா நாயர் உள்ளிட்ட பல நடிகைகள் இவரை நடுரோடு என்றும் பார்க்காமல் சண்டை பிடித்திருக்கின்றனர். அப்போதெல்லாம் பயில்வான் நாசுக்காக எஸ்கேப் ஆகி விடுவார். ஆனால் இப்போது அவர் ஷகிலாவிடம் மாட்டிக் கொண்டு திணறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு காலத்தில் கவர்ச்சி நடிகையாக திரையுலகையே கிடுகிடுக்க வைத்த ஷகிலா இப்போது சோசியல் மீடியா சேனல்களில் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது பயில்வான் ரங்கநாதனை பேட்டி எடுத்திருக்கிறார். அதில் அவர் இது நாள் வரை பலரின் மனதில் இருந்த கேள்விகளையும் பயில்வானிடம் கேட்டு அவரை சரமாரியாக வெளுத்து வாங்கி இருக்கிறார்.

Also read: ஷகிலா கேட்ட கேள்வியில் கதறிய கவர்ச்சி புயல்.. தெரிஞ்சுதான் காட்டுறேன்னு இதுல பெருமை வேற

ஷகிலாவின் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அவர் திணறியது அந்த பேட்டியில் வெளிப்படையாகவே தெரிந்தது. அதாவது நடிகைகளின் அந்தரங்கத்தை பற்றி அவர் மீடியாவில் பேசுவது குறித்து ஷகிலா கேள்வி எழுப்பினார். அதற்கு பயில்வான் நடிக்க வந்துவிட்டால் நடிகைகள் அனைவரும் பப்ளிக் ப்ராப்பர்ட்டி என்பது போல் பேசினார்.

இதனால் கடுப்பான ஷகிலா பல பத்திரிகைகளில் படித்ததை வைத்தும், சிலரிடம் கேட்டதை வைத்தும் தான் நீங்கள் பேசுகிறீர்கள். உண்மையில் உங்களிடம் அதற்கான ஆதாரம் எங்கே இருக்கிறது என்று ஆவேசமாக கேட்டார். அதற்கு பதிலளிக்க முடியாமல் திணறிய பயில்வான் உடனே சகிலாவை பற்றி பேசி பேச்சை மாற்றினார். ஆனாலும் விடாத ஷகிலா தன்னை பற்றி அவர் கேட்ட கேள்விகளுக்கும் பொறுமையாகவே பதில் அளித்தார்.

Also read: ஷகிலாவிற்கு கன்னத்தில் பளார் என விட்ட சில்க் ஸ்மிதா.. பலநாள் கோபத்தை பழி தீர்த்த சம்பவம்

ஒரு கட்டத்தில் ஷகிலா பயில்வானிடம் கஸ்தூரியை ஆண் என்று எதற்காக பேசினீர்கள் என கேட்டார். உடனே அவர் சமாளிப்பாக நான் தவறுதலாக பேசி விட்டேன். அதை எடிட் செய்யாமல் ஒளிபரப்பி விட்டார்கள் என்று கூறி எஸ்கேப் ஆனார். அது மட்டுமல்லாமல் தன் பேச்சை மாற்றும் விதமாக சகிலாவின் அந்தரங்க உறவு குறித்தும் கேள்வி எழுப்பினார். இப்படியாக சென்ற அந்த பேட்டியில் ஷகிலாவின் ஒவ்வொரு கேள்விகளும் சாட்டையடியாக வந்து விழுந்தது.

இப்படி ஒரு எதிர்வினையை எதிர்பார்க்காத பயில்வான் எப்போது இந்த பேட்டி முடியும் என்ற ரீதியில் அமர்ந்திருந்தார். அது மட்டுமல்லாமல் சமீப காலமாக சினிமாவை சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் விஷத்தை கக்கி வந்த பயில்வான் சகிலா முன்பு பல்லு புடுங்கிய பாம்பு போல் ஆகிவிட்டார். இதைத்தான் ரசிகர்கள் இதென்ன பயில்வானுக்கு வந்த சோதனை என கிண்டலாக குறிப்பிட்டு வருகின்றனர். இதன் பிறகாவது அவர் அடுத்தவரின் அந்தரங்கத்தை காசாக்காமல் இருந்தால் சரிதான்.

Also read: 90களின் ஆம்பளை ஷகிலா இந்த ஹீரோதான்.. குடும்பத்தோடு சேர்ந்து பார்க்க முடியாத 5 படங்கள்

Trending News