புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அழகில் ஷாலினியை ஓவர் டேக் செய்த மகள்.. இணையத்தில் வைரலாகும் க்யூட் போட்டோஸ்

Shalini Ajithkumar: கோலிவுட் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக அனைவராலும் கொண்டாடப்படுபவர்கள் தான் அஜித் ஷாலினி ஜோடி. அமர்களம் படப்பிடிப்பின் போது காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களை, ரோல் மாடலாக தற்போது நிறைய காதலர்கள் வைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு தங்களுடைய காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கையில் ஜெயித்திருக்கிறார்கள் இந்த ஜோடி.

அஜித் ஷாலினி தம்பதிகளுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என்ற இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். சமீபத்தில் இவர்களுடைய மகன் ஆத்விக் கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற புகைப்படங்களை ஷாலினி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருந்தார். இதை அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுமே கொண்டாடினார்கள். அஜித் குடும்பத்திற்கு வாழ்த்துகளும் தெரிவித்தார்கள்.

அஜித் எப்போதுமே பிரைவசியை விரும்புபவர் என்பதால் அவரைப் பற்றி அல்லது அவருடைய குடும்பத்தை பற்றி எந்த தகவல்களுமே வெளி வராது. அப்படி இருந்த பட்சத்தில் ஷாலினியின் தங்கை ஷாமிலி அவ்வப்போது அவர்களுடைய குடும்ப புகைப்படத்தை பகிர்வார். அப்படி இருந்த நிலையில் நடிகை ஷாலினி கடந்த வருடம் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய கணக்கை தொடங்கியது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ஷாலினி தற்போது அஜித் மற்றும் தன்னுடைய குடும்ப புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். நடிகை ஷாலினி அஜித்துடன் ஆன திருமணத்திற்கு பிறகு அவ்வளவாக மீடியா முன்பு வருவதை தவிர்த்து விட்டார். இருந்தாலும் இவர் மீது இன்றளவும் 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ் இடையே கிரேஸ் இருக்கிறது.

ஷாலினி நேற்று தன்னுடைய தங்கை மற்றும் மகளுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். பச்சை நிற புடவையில் ஷாலினி இன்னும் பயங்கர அழகாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். 40 வயதை தாண்டியும் ஷாலினி தன் இளமை மற்றும் அழகை இன்னும் மெயின்டைன் செய்து வருகிறார்.

                                                      ஷாலினி அஜித்குமார் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட புகைப்படங்கள்

Shalini Ajithkumar
Shalini Ajithkumar

ஷாலினிக்கு டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் அதிகம். திருமணத்திற்கு பிறகும் அதை தொடர்ந்து வருகிறார். இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும் கூட ஷாலினி டென்னிஸ் விளையாடும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது. அவருடைய இந்த பழக்கம் தான் இன்றளவும் தன் உடலை சிக்கென வைத்திருப்பதற்கு காரணம் என அவருடைய ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Trending News