வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

வாழ்க்கையே வாழ தானே, உலகத்தை சுற்றும் அஜித்தின் குடும்ப புகைப்படம்.. மரண மாஸ் லுக்கில் AK

தமிழ் சினிமாவில் பிரபல ஜோடியாக வலம் வருபவர்கள் ஷாலினி மற்றும் அஜித். அமர்க்களம் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு நடிகை ஷாலினி சினிமாவை விட்டு விலகி முழு நேரமும் குடும்பத்தை கவனித்து வருகின்றார்.

கடந்த 2000 ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறந்தது. இவர்களுக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது. அவரின் பெயர் அனோஷ்கா. அதையடுத்து சில ஆண்டுகளுக்கு பின்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. ஆண் குழந்தைக்கு ஆத்விக் அஜித் குமார் என்று பெயரிடப்பட்டிருக்கின்றது.

போட்டி போட்டு ஊர் சுற்றும் குடும்ப உறுப்பினர்கள்

சமீபத்தில் கூட நடிகர் அஜித் தனது மகன் ஆத்விக்குடன் கிரிக்கெட் விளையாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. பொதுவாக அஜித்தை பொருத்தவரையில் என்னதான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் குடும்பத்தோடு நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றார்.

முக்கியமாக வாழ்க்கையை வாழ வேண்டும். உலகத்தை சுற்றி பார்க்க வேண்டும். நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர். தனது குடும்பத்துக்கே முதல் உரிமையை கொடுப்பவர். சில மாதங்களுக்கு முன்பு கூட, ஷாலினி-க்கு மைனர் ஆபரேஷன் நடந்தபோது, ஷூட்டிங்கில் இருந்து திடீரென்று புறப்பட்ட சென்று தனது மனைவியை நல்ல முறையில் பார்த்து கொண்டார்.

Ajith-good-bad-ugly-look
Ajith-good-bad-ugly-look

இந்த நிலையில், இவரது மகனோ, எப்போதும் கால்பந்து போட்டி மீது அதிக ஆர்வம் கொண்டவர். தனது பள்ளிகளில் கால்பந்து போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடிய புகைப்படம் கூட இணையத்தில் வெளியானது. மேலும் ரியல் மேட்ரிக் அணியின் தீவிரமான ரசிகராகவும் ஆத்விக் இருக்கின்றார்.

இன்று ரியல் மேட்ரிக் அணிக்கும் வில்லர் ரியல் அணிக்கும் ஸ்பெயின் நாட்டில் சாண்டியாகோ மைதானத்தில் போட்டி நடைபெறுகின்றது. இந்த போட்டியை காண்பதற்காக ஆத்விக் தனது அம்மாவான ஷாலினியுடன் ஸ்பெயின் நாட்டிற்கு சென்று இருக்கின்றார்.

மேலும் இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகை ஷாலினி பகிர்ந்து இருக்கின்றார். இதை பார்த்து ரசிகர்கள், வாழ்ந்தால் இவர்களை போல வாழ வேண்டும் என்று ஏக்கத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News