Ajith: அஜித் நடிப்பில் இப்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த இரு படங்களும் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. அதில் விடாமுயற்சி வருடக் கணக்கில் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தாலும் ஏதோ ஒரு காரணத்தால் பிரேக் விடுவதும் மீண்டும் தொடங்குவதும் என இருக்கிறது. சமீபத்தில் கூட இப்படத்தின் சூட்டிங் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆரம்பமானது. ஆனால் திடீரென ஷாலினிக்கு உடல் நல குறைவு ஏற்படவே அஜித் உடனே சென்னை திரும்பினார்.
அதையடுத்து மீண்டும் ஷூட்டிங் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால் த்ரிஷா வேறு ஒரு பக்கம் கருத்து வேறுபாடில் இருக்கிறாராம். இப்படி பெரும் அக்கப்போராக இருக்கும் விடாமுயற்சியை எப்படியும் இந்த வருட இறுதிக்குள் வெளியிட வேண்டும் என லைக்கா தீவிரம் காட்டி வருகிறது.
ஷாலினியை கொஞ்சும் குட்டி அஜித்
ஏனென்றால் குட் பேட் அக்லி அடுத்த வருட பொங்கலை முன்னிட்டு வெளிவர உள்ளது. அதற்கு முன்பு விடாமுயற்சி ரிலீஸ் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் அவ்வப்போது அஜித்தின் புகைப்படங்கள் தான் ரசிகர்களுக்கு ஆறுதலை கொடுத்து வருகிறது.
அந்த வகையில் தற்போது நடிகர் தசரதி நரசிம்மன் அஜித்துடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் அஜித் வெள்ளை நிற சட்டையில் கூலிங் கிளாஸ் போட்டு தசரதி தோளின் மீது கை போட்டபடி போஸ் கொடுத்துள்ளார்.
இது வைரலாகி வரும் நிலையில் ஷாலினியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் ஆத்விக்கின் போட்டோவும் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. குட்டி அஜித் விளையாட்டில் ரொம்பவும் திறமையானவர்.
அந்த போட்டோக்கள் தான் இதுவரை வெளிவந்திருக்கிறது. ஆனால் தற்போது அம்மாவை கொஞ்சும் இந்த போட்டோ க்யூட்டாக உள்ளது. ஷாலினி உடல் நலம் தேறி வரும் நிலையில் அவர் படுத்திருப்பது போலவும் அவரை அணைத்தபடி ஆத்விக் முத்தம் கொடுப்பது போலவும் இருக்கும் அந்த போட்டோ படுவேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
சோசியல் மீடியாவில் வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
- திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாலினி
- பட்டுப் புடவை, நகை என ஜொலிக்கும் வரலட்சுமியின் திருமண புகைப்படங்கள்
- மெய்சிலிர்க்க வைத்த வைரல் புகைப்படங்கள்