திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அஜித் எங்களுக்கு மருமகனே இல்ல.. 23 வருடங்கள் கழித்து வாய் திறந்த ஷாலினியின் அப்பா!

Actor Ajith: ரீல் ஜோடியாக இருக்கும் போது கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி தற்போது சிறந்த தம்பதிகளாக மாறி இருக்கும் அஜித், ஷாலினி திருமண பந்தத்தில் இணைந்து 23 வருடங்கள் ஆகிறது. ஆனால் இப்போதும் கூட அவர்களுடைய காதல் பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறது.

அதை பற்றி இப்போது ஷாலினியின் அப்பா முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, அஜித் எப்போதுமே பயங்கர ஸ்பீடு தான். காதலிக்க ஆரம்பித்த உடனேயே அவர் குடும்பத்துடன் எங்கள் வீட்டிற்கு வந்து பெண் கேட்டார்.

Also read: அஜித்தால் சினிமாவே வேண்டாம் என வெறுத்து ஓடிய நடிகை.. சிம்ரன் அளவுக்கு வர வேண்டியவங்க!

உடனே ஜாதக பொருத்தம் எப்படி இருக்கிறது என்று பார்த்தோம். அப்போது அவர்கள் இருவருக்கும் 10 பொருத்தமும் பக்காவாக பொருந்தி இருப்பதாக சொன்னார்கள். அவர்கள் சொன்னது உண்மை என்று இப்போது தெரிகிறது. ஏனென்றால் இவர்களைப் போல ஒரு அன்பான ஜோடி எங்கும் கிடையாது.

இந்த திருமணத்தை நிச்சயம் செய்யும்போது எப்படி இரு குடும்பமும் ஒன்றாக பேசி சிரித்து மகிழ்ந்தோமோ அப்படித்தான் இன்று வரை இருக்கிறோம். அஜித் இரண்டு குடும்பத்தையும் அப்படி தாங்குகிறார். அதனால் அவர் எங்களுக்கு மருமகன் கிடையாது. இன்னொரு மகன் என்று மகிழ்ச்சியுடன் ஷாலினியின் அப்பா தெரிவித்துள்ளார்.

Also read: கதை கிடைக்காமல், ஹாலிவுட் பக்கம் சென்ற அஜித்.. விடாமுயற்சி எந்த படத்தின் தழுவல் தெரியுமா?

அந்த வகையில் மாமனாரிடம் இருந்து இப்படி ஒரு பாராட்டுதலை அஜித் வாங்கி இருப்பது அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது. அவர் ஒரு சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் கணவர், அப்பா என்று நிரூபித்ததோடு மட்டுமல்லாமல் நல்ல மருமகன் என்ற பெயரையும் வாங்கி விட்டார்.

பொதுவாக நடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகர்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்வது கொஞ்சம் சிரமம் தான். ஆனால் அஜித் இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என்பது அவருடைய மாமனாரின் பாராட்டிலேயே வெளிப்படையாக தெரிகிறது. இது பலருக்கும் ஒரு எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது.

Also read: ஐஸ்வர்யா ராய்க்கு ஆசைப்பட்டு மொத்த வாய்ப்பையும் பறிக்கொடுத்த நடிகர்.. சாதுரியமாக அஜித் வாங்கிய வாய்ப்பு

Trending News