செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

7 வருடங்களாக சந்தித்த அவமானம்.. 25 படங்கள் நடித்தும் விஜய் சேதுபதி வில்லனுக்கு கிடைக்காத அங்கீகாரம்

சினிமா கனவோடு திரைத்துறையில் காலடி வைக்கும் பலருக்கும் அந்த கனவு அவ்வளவு எளிதில் நனவானது கிடையாது. பல போராட்டங்களுக்கு பிறகு தான் ஒரு சிலர் முன்னணி இடத்திற்கு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ஒருவர் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் அவருக்கான அங்கீகாரம் இதுவரை கிடைக்கப் படவே இல்லை.

உதவி இயக்குனராக சேர்ந்து எப்படியாவது முன்னேறி விடலாம் என்று நினைத்து வந்த இந்த நடிகர் தவிர்க்க முடியாத காரணத்தால் நடிகராக மாறினார். ஆரம்ப காலகட்டத்தில் இறைவி, லோகேஷ் கனகராஜன் மாநகரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவருக்கு விஜய் சேதுபதியின் திரைப்படம் தான் ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

Also read: தொப்பையும், தொந்தியுடன் வந்த டிஎஸ்பி.. கேலி, கிண்டலால் ஸ்லிமான விஜய் சேதுபதியின் செல்பி புகைப்படம்

அந்த வகையில் விக்ரம் வேதா திரைப்படத்தில் ரவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் விவேக் பிரசன்னா. அதில் இவர் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடித்திருப்பார். அதனாலேயே இவருடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது அதை தொடர்ந்து மேயாத மான், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

மேலும் பேட்ட திரைப்படத்தில் காலேஜ் ப்ரொபசர் ஆகவும் இவர் நடித்திருப்பார். அது மட்டுமல்லாமல் சூரரைப் போற்று திரைப்படத்தில் இவர் சூர்யாவின் நண்பனாக நடித்திருப்பார். இவ்வாறு அவர் நடிக்க வந்த இந்த ஏழு வருடங்களில் கிட்டத்தட்ட 25 படங்கள் வரை நடித்திருக்கிறார்.

Also read: ஜெய்சங்கர் போல் விஜய் சேதுபதிக்கு வந்த நிலைமை.. அந்த 2 படத்தால் மொத்த கேரியருக்கும் வந்த சோதனை

அதில் பல திரைப்படங்கள் முன்னணி நடிகர்கள் மற்றும் டாப் இயக்குனர்களின் திரைப்படங்கள்தான். ஆனாலும் அவருக்கான அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை. திரைப்படங்கள் மட்டுமல்லாமல் இவர் நல்ல வரவேற்பை பெற்ற நவம்பர் ஸ்டோரி உள்ளிட்ட வெப் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்த வதந்தி வெப் தொடரில் ராமர் என்ற கேரக்டரில் இவர் நடித்திருந்தார். இவ்வாறு தன்னை தேடி வரும் வாய்ப்புகளை சிறப்பாக செய்து வரும் இவருக்கு தற்போது பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லையாம். ஆனாலும் தனக்கான இடத்தை பிடிக்க அவர் போராடி வருவதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Also read: டிஎஸ்பி-யை விட வசூலில் மண்ணைக் கவ்விய கட்டா குஸ்தி.. எம்மாடி என பெருமூச்சு விட்ட விஜய் சேதுபதி.!

Trending News