சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

வாலி போல் இரட்டை கதாபாத்திரத்தை மிஸ் பண்ண அஜீத்.. பிரபல நடிகருக்கு அடித்த அதிர்ஷ்டம்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக பல திரைப்படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் சங்கர். அவரின் ஆரம்ப கால படங்கள் முதல் தற்போது வரை வெளியாகும் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகத்தில் இருக்கும்.

தற்போது பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வரும் ஷங்கர் இருபது வருடங்களுக்கு முன்பு நடிகர் அஜித்தை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருந்தார். அவர்கள் கூட்டணியில் அந்தப் படத்திற்காக பூஜையும் கோலாகலமாக தொடங்கப்பட்டது.

ஆனால் இடையில் அந்தப் படம் பூஜையுடன் கைவிடப்பட்டது. அதற்குப் பிறகு அந்த திரைப்படம் வேறு ஒரு ஹீரோவை வைத்து உருவாக்கப்பட்டது. நடிகர் பிரசாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்த ஜீன்ஸ் திரைப்படம் தான் அது. அந்தத் திரைப்படத்தில் தான் முதலில் அஜித் நடிக்க இருந்தார்.

அதற்கு முன்பே அஜித், பிரசாந்த் இருவரும் இணைந்து கல்லூரி வாசல் என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கின்றனர். அந்த சமயத்தில் அஜித் பிரசாந்த் அளவுக்கு பிரபலமான நடிகர் கிடையாது. இதனால் ஷங்கர் இயக்க இருந்த அந்த படத்தின் வாய்ப்பு பிரசாந்துக்கு சென்றது.

ஆனால் அதன்பிறகு சில வருட இடைவெளிகளில் நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. சமீபகாலமாக பிரசாந்த் நடிப்பில் வெளியான எந்த திரைப்படமும் ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை. இதனால் அவரை தற்போது எந்த திரைப்படங்களிலும் பார்க்க முடிவதில்லை.

இதற்கு நேர்மாறாக அஜித் தற்போது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அஜித்திற்காக எதையும் செய்யும் அளவுக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் ஜீன்ஸ் திரைப்படத்திலிருந்து அஜித் விலகிய பின்னர் சங்கர் இயக்கத்தில் அவர் எந்த திரைப்படத்திலும் இதுவரை நடிக்கவில்லை. தற்போது ஷங்கர் அஜித்தை வைத்து ஒரு படத்தையாவது இயக்கி விடமாட்டோமா என்ற ஏக்கத்தில் இருக்கிறார்.

Trending News