Sankar Indain 2: தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயரை எடுத்தவர் தான் இயக்குனர் சங்கர். இவர் எத்தனையோ படங்கள் எடுத்திருந்தாலும் இப்ப வரை சாதனை படமாக நிலைத்து நிற்பது கமல் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் படம். ஊழல் மற்றும் அநியாயங்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்களை தட்டிக் கேட்கும் இந்தியன் தாத்தாவாக அனைவரது மனதிலும் இப்படம் இடம் பெற்றது.
ஆனாலும் இப்படத்தை எடுக்கும் பொழுது பல பிரச்சினைகளை சங்கர் சந்தித்திருக்கிறார். அதாவது இப்படத்தில் ஒன் லைன் ஸ்டோரியை நிறைய தயாரிப்பாளர்களிடம் சொல்லி இருக்கிறார். ஆனால் 75 வயதில் இருக்கும் முதியவர் இப்படத்தின் ஹீரோவா என்று கதி கலங்கி அப்படியே ஒவ்வொரு தயாரிப்பாளர்களும் எஸ்கேப் ஆகிவிட்டார்கள்.
அதன்பின் அந்த முதியவருக்கு மர்ம கலை தெரியும். நேதாஜி சுபாஷ் சந்திர போஷின் ஆர்மி மேன் என்றெல்லாம் சொல்லி தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினத்தை ஒத்துக்க வைத்தார் ஷங்கர். இப்படி பல சிக்கலை சமாளித்து இந்தியன் முதல் பாகத்தை எடுத்து வெளியிட்டார். அதே மாதிரி யாரும் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு இப்படம் மாஸ் ஹிட் ஆனது.
அப்படி ஹிட்டான இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பல வருடங்களுக்குப் பிறகு எடுக்க ஆரம்பித்தார். எந்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டதோ அப்போதிலிருந்து இப்பொழுது வரை பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. அதாவது சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக நடந்த விபத்து, விவேக்கின் மரணம் மற்றும் நெடுமுடி வேணு இறப்பு என்று அடுத்தடுத்து ஒவ்வொரு தடங்கலாக வர ஆரம்பித்தது.
அதனாலயே பல வருடங்களாக இழுத்தடித்து கொண்டே இருந்தது. ஒரு வழியாக இப்படத்தை எடுத்து முடித்தார்கள். ஆனாலும் பிரச்சனை இன்னும் முடிவில்லாமல் தான் போய்க் கொண்டிருக்கிறது. அதாவது சங்கர் எடுத்த கதையின் மொத்த நான்கு மணி நேரத்துக்கு மேலாக நீடித்திருக்கிறதாம். இதுல எதை விடுவது எந்த சீனை வைக்கணும் என்று பெரிய குழப்பத்தில் மொத்த பட குழுவும் தவித்து வருகிறார்கள்.
இதற்கு இடையில் நேற்று இப்படத்தின் அறிமுக வீடியோ ஒன்றை வெளியிட்டார்கள். ஆனால் அது எதிர்பார்த்த அளவிற்கு மக்களை திருப்தி படுத்தவில்லை. பெருசாக சொல்லும்படியான பிஜிஎம் செட் ஆகவில்லை. ஆகோ ஓஹோ என்று சொல்வதற்கு ஏற்ப எதுவும் இல்லை. ஆக மொத்தத்தில் நல்ல கதையை சொதப்பி விட்டார்கள் என்பது போல் தெரிகிறது. அட்லீஸ்ட் இதற்குப் பிறகாவது கதையில் சில மாற்றங்களை வைத்து ட்ரெய்லரை நச்சென்று வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also read: கோபத்தை எல்லாம் பொசுக்கிற படமாய் இருக்கணும் தம்பி.. சொல்லிக் கொள்ளும்படி சாதிக்காத அதிதி சங்கர்