திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கப்பல் மூழ்கினாலும் பயத்தை காட்டாத சங்கர்.. கெத்து குறையாமல் செய்யும் அடாவடித்தனம்

இந்தியன் 2 படத்திற்கு எல்லா பக்கமும் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் சங்கர் மட்டும் தன்னுடைய கெத்தை ஒரு துளி கூட எங்கேயும் விட்டுக் கொடுக்கவில்லை. நான் நம்பர் ஒன் இயக்குனர், நான் சொல்லுவதை தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று விடாப்பிடியாய் நிற்கிறார்.

 ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்தை லைக்காவிடம் போட்டுக் காட்டவே  இல்லையாம் சங்கர். கிட்டத்தட்ட ஐந்து வருடமாக எடுக்கப்பட்ட இந்த படத்தை 10 நிமிடம் கூட லைக்காவிற்கு போட்டுக் காட்டவில்லை. இதனாலேயே லைக்கா,  சங்கர் மீது அதிருப்தியில் இருந்து உள்ளது. 

 இப்பொழுது படம் மொத்தமும் வீணா போனது. ஒரு கட்டத்தில் ரிலீஸ்க்கு முன்பே படம் மிகவும் நீளமாக இருக்கிறது என சங்கரிடம் லைக்கா கூறவே அதனை எள்ளளவும் சங்கர் கேட்கவில்லையாம்.   என்னுடைய படம், எல்லாம் நன்றாக தான் இருக்கும் என ஓவர் கான்பிடென்ஸில் லைக்கா வாயை அடைத்துள்ளார் சங்கர்.

கெத்து குறையாமல் செய்யும் அடாவடித்தனம்

 ஒரு தயாரிப்பாளரா, அவ்வளவு காசுகளை கொட்டும் லைக்காவிடம் சங்கர் மிகவும்  காட்டமாக நடந்து கொண்டுள்ளார்.  மக்கள் ரசிக்கும்படி படம் எடுக்க வேண்டும் இப்பொழுது அந்த மக்களுக்கே இந்த படம் பிடிக்கவில்லை.

லைக்கா சங்கரிடம் படத்தில் அரை மணி நேரம் காட்சிகளை நீக்க வேண்டும் என கூறி இருக்கிறது. ஆனால் அதையும் சங்கர் கேட்க மறுத்துள்ளார்.  இப்பொழுது படத்தில் வெறும் 11 நிமிட காட்சிகளை மட்டும் நீக்கியுள்ளார். இருந்தாலும் படத்திற்கு வரும் நெகட்டிவ் ரிவியூஸ் வந்து கொண்டு தான் இருக்கிறது.

Trending News