வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தளபதி 70 படத்தை ஷங்கர் இயக்குகிறாரா? வாய்ப்பில்லை ராஜா

Thalapathy 70: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியுள்ள நிலையில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு லியோ படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் வெங்கட் பிரபு அடுத்ததாக விஜய்யின் படத்தை இயக்க இருக்கிறார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள தளபதி 68 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். இந்நிலையில் தளபதி 68 படத்திற்கு பிறகு சினிமாவில் சிறிய இடைவெளியை விஜய் எடுக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. ஆனால் அதற்குள் கடந்த சில நாட்களாக தளபதி 70 படத்தை ஷங்கர் இயக்க உள்ளார் என கூறப்பட்டது.

Also Read : 10 வருடத்திற்கு முன்பு சூப்பர் ஸ்டாருக்கு நடந்த அதே சம்பவம்.. இப்போது பனையூரிலும் விஜய்க்கு நிகழ்ந்திருக்கிறது

ஏற்கனவே ஷங்கர் மற்றும் விஜய் கூட்டணியில் நண்பன் படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. ஆகையால் மீண்டும் இந்த கூட்டணி இணைவது ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இப்போது தளபதி 70 படத்தை ஷங்கர் இயக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்களை இப்போது ஷங்கர் இயக்கி வருகிறார். இதை அடுத்து முழு கவனத்தையும் வேள்பாரி கதையில் செலுத்த இருக்கிறார். இப்படம் கண்டிப்பாக சரித்திரம் பேசும் படமாக என கூறப்படுகிறது. இதற்கான வேலையில் தான் இப்போது முழு வீச்சாக ஷங்கர் இறங்க இருக்கிறார்.

Also Read : விஜய்யின் 69 ஆவது படத்திற்கு லட்டு மாதிரியான கதை.. அட்லீயை ஓரங்கட்டி சரியான இடத்தில் செக் வைத்த ஷங்கர்

ஆனாலும் விஜய்யுடன் தொடர்ந்து தொலைபேசி வாயிலாக ஷங்கர் பேசி வருகிறார். எனவே இவர்களது கூட்டணியில் படம் உருவாகுவது உறுதியாக இருந்தாலும் தளபதி 70 படம் இருக்காது என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. விஜய் வெங்கட் பிரபுவுக்கு அடுத்ததாக அட்லீ படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இப்போது அரசியலுக்காக விஜய் பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார். அதுவும் குறிப்பாக மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நல திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். எனவே சினிமாவை போல அரசியலிலும் இறங்க இரட்டை சவாரி செய்ய உள்ளார் தளபதி விஜய்.

Also Read : அடுத்த தலைமுறை தான் என்னோட டார்கெட்.. அதிரடியாக இறங்கி அடிக்கும் விஜய்யின் மாடல்

Trending News