திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

2 ஹீரோக்களுடன் சங்கர் நடத்தும் பேச்சுவார்த்தை.. ஒரு சைடு கிரீன் சிக்னலால் வந்த முட்டுக்கட்டை

சங்கரின் கனவு படமான வேள்பாரியை இதற்கு மேலேயும் இழுத்துக் கொண்டு போனால் மொத்தமும் வீணாகிவிடும் என அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இதற்காக இரண்டு ஹீரோக்களை தேர்வு செய்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

சு.வெங்கடேசன் எழுதிய நாவல் வீரயுக நாயகன் வேள்பாரி. இந்த நாவலை படமாக எடுக்க சங்கர் நான்கு வருடங்களாக திட்டமிட்டு வருகிறார். இதை ஆயிரம் கோடி பட்ஜெட்டில் எடுப்பதற்கு தயாரிப்பாளர்களை தேடி வந்த நிலையில் இப்பொழுது அவருக்கு பல சிக்கல்கள் வந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்த தேவரா படத்தில் இந்த நாவல் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் இடம் பெற்றுள்ளது என சங்கர் குற்றம் சாட்டி வந்தார். அது மட்டுமில்லாமல் இதன் உரிமைகள் அனைத்தும் தன்னிடம் இருக்கிறது என காப்பிரைட்ஸ் வாங்கி வைத்திருக்கிறார்.

ஒரு சைடு கிரீன் சிக்னலால் வந்த முட்டுக்கட்டை

இப்பொழுது இதற்கு மேலேயும் நாட்களை கடத்தினால் இந்த கதையை எடுக்கவே முடியாது என விக்ரம் மற்றும் சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதில் விக்ரம் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டார். ஆனால் தொடர்ந்து படங்கள் பண்ணிவரும் சூர்யா மட்டும் இழுத்தடிக்கிறார். காம்பினேசனை மாற்றி விட்டால் எடுபடாது என முழித்து கொண்டிருக்கிறார் சங்கர்

ஆயிரம் கோடி பட்ஜெட்டில் இந்த படம் மூன்று பாகங்களாக உருவாக உள்ளது.இரண்டு ஹீரோக்கள் கொண்ட சப்ஜெக்ட்டில் ஒரு ஹீரோ விக்ரம் என்பது உறுதியாகிவிட்டது. சூர்யா தொடர்ந்து மூன்று படங்களில் கமிட் ஆகியுள்ளதால் இந்த படத்திற்கு நேரம் இருக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. . கங்குவா, கார்த்திக் சுப்புராஜின் சூர்யா 44. மற்றும் ஆர் ஜே பாலாஜிக்காக ஒரு படமும் பண்ணவிருக்கிறார்.

Trending News