புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இரண்டாம் பாகத்துக்கு வாய்ப்பில்லாத 5 படங்கள்.. இன்றுவரை ஏமாற்றி கொண்டிருக்கும் ஷங்கர்

மற்ற மொழி படங்களை கம்பேர் பண்ணும் போது தமிழில் எவ்வளவு பெரிய ஹிட் படங்களின் இரண்டாம் பாகமாக இருந்தாலும் அவ்வளவாக ஈடுபடுவதில்லை. இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் ஒரு சில படங்களின் இரண்டாம் பாகத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சில படங்களின் இரண்டாம் பாகங்கள் படப்பிடிப்பிலும் இருக்கின்றன. இரண்டாம் பாகத்துக்கு வாய்ப்பில்லாத 5 படங்கள்.

மங்காத்தா: மங்காத்தா நடிகர் அஜித்தின் 50 வது திரைப்படம் ஆகும். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இந்த படத்தில் திரிசா, அர்ஜுன், லக்ஷ்மி ராய், அஞ்சலி , ஆண்ட்ரியா ஜெரமையா, வைபவ், மஹத் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் மொத்தம் 75 கோடி வசூல் செய்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது.

Also read: தனுஷ்-பிரகாஷ்ராஜ் கூட்டணியில் வெளியான 4 படங்கள்.. உங்களுக்கு பிடித்த படம் எது

ஆரண்யகாண்டம்: தியாகராஜன் குமாரராஜாவின் முதல் திரைப்படம் ஆரண்யகாண்டம் . ‘நியோ நோயேர்’ வகையில் வெளியான முதல் திரைப்படம் ஆகும். ‘நியோ நோயேர்’ என்பது அதிகமான கொலை, குற்றங்கள், வன்முறைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.

அந்நியன்: ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில், இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம். இதில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சதா மற்றும் விவேக் நடித்திருந்தனர். இந்த படத்தின் முடிவில் அம்பியின் உடம்பில் மீண்டும் அந்நியன் வருவது போல முடித்திருப்பார்கள். அதனாலேயே என்னவோ இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்க்கின்றனர். சங்கர் இதற்கான எந்த அறிவிப்பையும் சொல்லவில்லை.

Also read : சிவாஜியும், ரஜினியும் கூட்டணி அமைத்த 5 வெற்றி படங்கள்.. நடிக்கவே பயந்த சூப்பர் ஸ்டார்

புதுப்பேட்டை: இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் முதல் முதலாக வந்த ஆக்சன் திரைப்படம் ஆகும். இதில் தனுஷ், ஸ்னேகா,சோனியா அகர்வால் நடித்திருக்கின்றனர். தமிழில் வந்த ஒரு முழு கேங்ஸ்டர் திரைப்படம் இதுவாகும். செல்வராகவனின் இரண்டாம் பாகங்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் லிஸ்டில் புதுப்பேட்டை முதலில் உள்ளது.

மருதநாயகம்: கமலஹாசனின் கனவுப்படமாக இருந்த மருதநாயகம் இப்போது தமிழ் ரசிகர்களின் கனவுப்படமாக இருந்தது. 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்திற்கு அப்போதே 50 கோடி பட்ஜெட் போடப்பட்டது. இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்புக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் வந்திருந்தார். இந்த படத்தின் வேலைகளை தொடங்க வேண்டும் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு.

Also read: எஸ் ஜே சூர்யாவை அடையாளப்படுத்திய 2 படங்கள்.. இன்று வரை பேசப்படும் கதாபாத்திரங்கள்

Trending News