திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ரஜினி, சிரஞ்சீவியை விட்டுறாதீங்கன்னு ஆர்டர் போட்ட ஷங்கர்.. விடாமல் துரத்திய அட்லீ!

Shankar ordered not to leave Rajini and Chiranjeevi: தமிழ்  சினிமாவின் முன்னணி இயக்குனர் சங்கர், அவர் இயக்கும்  படங்களிலேயே பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் வைக்காதவர் தனது வீட்டுகல்யாணத்தை பிரம்மாண்டம் ஆக்காமல் விடுவாரா?

சங்கர் தற்போது உலக நாயகனுடன் இந்தியன் 2  படத்தை முடித்த கையோடு தெலுங்கில் ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தில் பிசியாக உள்ளார்.  

கடந்த ஏப்ரல் 14 அன்று தனது மூத்த மகள் ஐஸ்வர்யா  சங்கர் மற்றும் தனது உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனின் திருமணத்தை ஈசிஆரில் ஆடம்பரமாக நடத்தி முடித்தார். 

ஆஹா கல்யாணம்! ஆஹா கல்யாணம்! என தனது மகள் ஐஸ்வர்யா சங்கரின் கல்யாணத்தை தடபுடலாக நடத்தி முடித்துள்ளார். பாலிவுட், கோலிவுட்,  டோலிவுட் என பல பக்கமும் இருந்து திரைபிரபலங்கள் பலரும் திருமணத்திற்கு வந்து தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். 

பாராளுமன்றத் தேர்தலில் பிசியாக இருந்த போதும் தமிழக முதல்வர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் இருவரும் சங்கர் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மாதம்பட்டி ரங்கராஜனின் மேற்பார்வையில் திருமண விருந்து

திருமணம் என்றாலே வரவேற்பும்  சாப்பாடும்தான் பிரதானமாக இடம்பெறுவது உண்டு. சங்கர் வீட்டு திருமண விருந்து சாப்பாடு முழு பொறுப்பும் மாதம்பட்டி ரங்கராஜனிடம் ஒப்படைக்கப்பட்டது.

முதல்வர் முதற்கொண்டு வந்த விருந்தினர்கள் அனைவரையும் சாப்பிடாமல் அனுப்பக்கூடாது என்பது சங்கர் இட்ட கட்டளை.  

கட்டளையை தவறாது செயல்படுத்தியவர் தங்களிடம் உதவி இயக்குனராக இருந்து இன்று இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த ஜவான் பட இயக்குனர் அட்லீ தான்.

Director Atlee in Shankar daughter marriage function

ரஜினி மற்றும் சிரஞ்சீவியை சாப்பிடாமல் போகக்கூடாது என்று அட்லீயிடம் சங்கர் ஒரு ஆர்டர் போட்டு விட்டாராம். இதன்படி ரஜினி, சிரஞ்சீவி உள்பட வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் மாதம்பட்டி விருந்தை ஒரு பிடி பிடித்துள்ளார்.

பலவகையான வெரைட்டீஸ்களும் பதார்த்தங்களும் அற்புதமான சுவையில் பாரம்பரிய முறையில் சமைக்கப்பட்டு  நேர்த்தியான முறையில் விருந்து பரிமாறப்பட்டது. 

முதல்வருக்கு பரிமாறுவதற்கு முன் அவரது உதவியாளர்கள் மூலம் உணவு தரம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டது. முதல்வர் மற்றும் அவரது துணைவியார் இருவரும் விருந்தில் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

அது மட்டும் இன்றி திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு, தாம்பூல பையில் திருப்பதி லட்டு அன்பளிப்பாக வழங்கப்பட்டதாம்.  

திருப்பதி ஏழுமலையானின் பூர்ண ஆசீர்வாதத்துடன் சங்கர் வீட்டு திருமணமும், திருமண விருந்தும் தடபுடலாக களைகட்டியதாம். 

Trending News