பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் கடந்த ஒன்றரை வருடங்களாக ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை வாரிசு படத்தை தயாரித்த வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் உரிமையாளர் தில்ராஜ் தயாரிக்கிறார். தற்சமயம் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டது. 2025 பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இப்பொழுது சுமார் 210 பேர் கொண்ட குழு இந்த படத்தின் பிரமோஷனுக்காக அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கே நடத்திய நிகழ்ச்சி செம ஹிட் அடித்துள்ளது. ஆனால் இந்த படத்திற்காக மொத்த கஜானாவையும் காலி செய்துள்ளார் தில்ராஜ். அந்த அளவிற்கு சங்கர் இதில் கை வண்ணம் காட்டியுள்ளார்.
450 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் ஹிட் அடித்தால் தான் தயாரிப்பாளருக்கு மறுவாழ்வு. அதனால் உச்சகட்ட பரபரப்பில் இருக்கிறார் தில்ராஜ். இன்னும் இந்த படத்திற்கு பிரமோஷன் செலவுகள் இருக்கிறது எப்படி பார்த்தாலும் 500 கோடிகளை தாண்டிவிடும்.
இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். ஒவ்வொரு பாடலுக்கும் சுமார் 10 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளார் சங்கர். அதில் ஒரு பாடல் காட்சிகளில் தோன்றும் ராம்சரணின் ஆடை செலவுகள் மட்டுமே 47 லட்சமாம். பிரபல ஆடை கலைஞரான மினிஸ் மல்கோத்ரா இதில் வேலை பார்த்துள்ளார்.
இந்தியாவிலேயே முதல் முதலாக இந்த படத்திற்காக இன்ஃப்ரா ரெட் கேமராவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இரவில் கூட மிகத் துல்லியமாக எடுக்கக் கூடியதாம். இந்த கேமராவிற்கும் பல கோடிகள் இறக்கி உள்ளார் தில்ராஜ். இப்படி சங்கர் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து தில்ராஜ் பைசாவில் இஷ்டத்துக்கு புகுந்து விளையாடிருக்கிறார்.