வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

சங்கர் பிடிக்கும் உடும்பு பிடி.. நான் பிடித்த முயலுக்கு மூணு காலுன்னு லைகாவிற்கு கொடுக்கும் டார்ச்சர்

இந்தியன் 3 படத்திற்காக நான்கு பெருந்தலைகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. போனில் நடைபெற்ற அந்த மீட்டிங்கில் ஓரளவு சுமூகமான முடிவு எடுத்தாலும் சங்கர் சில இடங்களில் விடாப்பிடியாய் நிற்கிறாராம். நான் பிடித்த முயலுக்கு மூணு காலுன்னு அவருடைய வாதங்கள் இருக்கிறது.

இந்தியன் 2 படம் பெரிய பிளாப் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இந்த படம் எடுக்கும் போதே கிட்டத்தட்ட 80 சதவீதம் அடுத்த பாகமாகிய இந்தியன் 3க்கும் எடுத்துள்ளனர். இப்பொழுது மேற்கொண்டு 80 கோடிகள் இருந்தால் தான் படத்தை முடிக்க முடியும் என சங்கர் விடாப்பிடியாய் நிற்கிறார்.

ஏற்கனவே இரண்டாம் பாகத்தால் நஷ்டமடைந்த லைகா நிறுவனம், சங்கரை கொஞ்சம் விட்டுக் கொடுக்கும்படி கூறி வருகிறது. இந்த பஞ்சாயத்தை தான் சங்கர், லைகா கமல் என மூவரிடமும் வீடியோ காலில் உதயநிதி பேசி வந்தார்.

அந்த உரையாடலில் இந்தியன் 3 பற்றிய பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இதுவரை அந்தப் படத்திற்காக எடுத்த காட்சிகள் மொத்தத்தையும் தங்களிடம் போட்டுக் காட்டுமாறு லைக்கா தரப்பு சங்கரிடம் கேட்டுக் கொண்டது. இதற்கு சங்கர் சம்மதித்தமுள்ளார் உள்ளார்.

மேலும் படத்தை பார்க்கும் போது தன்னுடைய கிரியேட்டிவிட்டியில் தலையிடக்கூடாது என்றும் எந்த காட்சிகளையும் குறை சொல்லி மாற்றி அமைக்கும்படி வற்புறுத்த கூடாது எனவும் ஆர்டர் போட்டிருக்கிறார் சங்கர். எடுத்தது எடுத்ததுதான் அதை புரிந்து கொண்டால் போட்டுக்காட்டுகிறேன் என்றும் கூறியுள்ளாராம்.

Trending News