வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விஜய்க்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா.? உச்சகட்ட டென்ஷனில் இருக்கும் ஷங்கர்

பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தற்போது தெலுங்கு பக்கம் தன் கவனத்தை திருப்பி உள்ளார். அங்கு அவர் பிரபல நடிகர் ராம் சரணை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். மிகவும் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை தில் ராஜு தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது இந்த படத்திற்கு தான் ஒரு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது தெலுங்கு திரையுலகில் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு ஸ்ட்ரைக் நடந்து கொண்டிருக்கிறது. அதில் திரை துறையினரின் சம்பளம், தியேட்டர்களில் டிக்கெட் விலை உயர்வு போன்றவற்றை எல்லாம் குறைக்க சொல்லி காலவரையற்ற ஸ்டிரைக் அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதனால் படப்பிடிப்புகள் நடக்காமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சங்கரின் படமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தில் ராஜு தயாரித்துக் கொண்டிருக்கும் மற்றொரு படமான வாரிசு படத்தின் சூட்டிங் மட்டும் ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கு காரணம் படத்தின் தயாரிப்பாளர் இது தமிழ் படம், அதனால் இதற்கு ஸ்டிரைக் பண்ணுவது நியாயம் இல்லை. இந்தப் படத்தின் ஷூட்டிங்கை நடத்துவதற்கு அனுமதி கொடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு போராட்டக்காரர்களும் சம்மதித்து ஷூட்டிங்கை நடத்திக் கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் சூட்டிங் அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது. இதை பார்த்து தான் ஷங்கர் தற்போது கடுப்பில் இருக்கிறாராம். தில் ராஜு இந்த படத்திற்கும் அனுமதி வாங்கி இருக்கலாமே என்றும் அந்தப் படத்திற்கு ஒரு நியாயம், இந்த படத்திற்கு ஒரு நியாயமா என்றும் அவர் புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

ஏற்கனவே தமிழில் இவர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 திரைப்படம் பல பிரச்சனைகளின் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதனால் தான் அவர் தெலுங்கு பக்கம் படம் இயக்க வந்தார். ஆனால் இங்கும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டிருப்பது ஷங்கரை மனதளவில் சோர்வடைய வைத்துள்ளது.

Trending News