வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சூர்யாவை தூக்கியெறிந்த சங்கர்.. 1000 கோடி பட்ஜெட்டில் நடிக்கப்போகும் பிரபல நடிகர்

சூர்யா தற்போது வணங்கான், வாடிவாசல் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் 42வது படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் சூர்யா முதன்முறையாக நடிக்க உள்ளதாக இணையத்தில் செய்தி வெளியானது. அதாவது பிரம்மாண்ட பட்ஜெட்டில் எழுத்தாளர் வெங்கடேசனின் வேள்பாரி என்ற வரலாற்று நாவலை ஷங்கர் இயக்க உள்ளதாக கூறப்பட்டது.

Also Read :யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்.. வணங்கான், வாடிவாசல் படத்தில் சூர்யா செய்யப் போகும் சம்பவம்

இந்த வரலாற்று நாவலில் கதாநாயகனாக சூர்யா நடிக்கவிருக்கிறார் என்று செய்தி வெளியான நிலையில் தற்போது வேறு ஒரு பிரபல நடிகர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இப்படம் கிட்டத்தட்ட 1000 கோடி பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படவுள்ளது.

இந்த படத்தை நெட்பிளிக்ஸ் மற்றும் கரண் ஜோஹர் தயாரிக்க உள்ளனர். நெட்பிளிக்ஸ் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையும், கரண் ஜோஹர் திரையரங்கு உரிமையும் பெற்றுள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் சூர்யா நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Also Read :ஹாலிவுட் தரத்தில் உருவாகும் சூர்யா 42.. மிரளவிட்ட மோஷன் போஸ்டர்

அதாவது இந்த வேள்பாரி வரலாற்று நாவலில் கன்னட நடிகர் யாஷ் நடிக்க நடிக்க உள்ளார். இவர் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் படம் கன்னட ரசிகர்களை தாண்டி தமிழ் மொழியிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. மேலும் விஜய்யின் பீஸ்ட் படத்துடன் வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகமும் அமோக வரவேற்பை பெற்றது

அதுமட்டுமின்றி பீஸ்ட் படத்தின் தோல்விக்கு காரணம் கே ஜி எஃப் என்றும் விமர்சனங்கள் எழுந்தது. இதனால் தற்போது இந்த வரலாற்று நாவலை கே ஜி எஃப் நடிகர் யாஷை வைத்து ஷங்கர் இயக்க உள்ளார். பொன்னியின் செல்வன் போன்று தமிழ் வரலாற்றில் நாவலை படமாக இயக்க ஷங்கரைப் போன்று பல இயக்குனர்கள் முன்வருவது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

Also Read :4 வருடங்களுக்குப் பிறகு ஃபுல் ஃபார்மில் இறங்கிய ஷங்கர்.. ஒரே நேரத்தில் இரட்டை சவாரி

Trending News