புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மகள்களால் உச்சக்கட்ட மன அழுத்தத்தில் இருக்கும் சங்கர்.. பற்றி எரியும் குடும்ப பஞ்சாயத்து

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் இயக்குனர் ஷங்கர் தற்போது ஏகப்பட்ட பிரச்சனைகளில் சிக்கித் தவித்து வருகிறார். அவரின் குடும்பத்திற்கு உள்ளே நடந்த சிறுசிறு பிரச்சினைகள் தற்போது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு இவருடைய மூத்த மகளுக்கு ரோஹித் என்பவருடன் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. அப்போது கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் நெருங்கிய சிலரை தவிர திரையுலகில் இருக்கும் யாரும் இந்த திருமணத்திற்கு அழைக்கப்படவில்லை.

அதன்பிறகு சில மாதங்களுக்கு முன்பு சங்கர் தன் மகளின் திருமண வரவேற்பை பிரம்மாண்டமாக நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார். அதற்காக பத்திரிக்கைகளும் தயார் செய்யப்பட்டு பிரபலங்கள் பலருக்கும் கொடுக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்த திருமண வரவேற்பு நிறுத்தப்பட்டது.

ஷங்கரின் மருமகன் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட வழக்கு காரணமாகத்தான் இந்த வரவேற்பு நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் கணவருடன் கருத்து வேறுபாட்டில் இருந்த அவருடைய மகள் தற்போது இந்த திருமண உறவே வேண்டாம் என்று விவாகரத்து செய்வதற்கு தயாராகிவிட்டாராம்.

மகளின் இந்த முடிவால் ஷங்கர் தற்போது மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அவருடைய இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக கமிட்டாகி வருகிறார். ஆனால் சங்கருக்கு தன் மகள் படங்களில் நடிப்பது கொஞ்சமும் விருப்பம் இல்லையாம்.

ஆனாலும் அதிதி இன்னும் சில வருடங்கள் நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார். இதுவும் ஷங்கரை மிகுந்த வேதனை அடையச் செய்துள்ளது. மேலும் அவர் தற்போது தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

அந்த படமும் தற்போது பண பிரச்சனையில் சிக்கி உள்ளதாக தெரிகிறது. இப்படி திரும்பும் பக்கமெல்லாம் ஒவ்வொரு பிரச்சனையாக வந்து கொண்டிருப்பதால் சங்கர் இப்போது உச்சகட்ட மன அழுத்தத்தில் தவித்து வருகிறார். அவருடைய நிலையை பார்க்கவே பரிதாபமாக இருப்பதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

Trending News