புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரகசியமாக பிரம்மாண்ட ஹோட்டலில் நடந்த சங்கர் மகளின் நிச்சயதார்த்தம்.. மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?

Director sankar’s daughter Engagement: நடிகருக்கு மட்டும் தான் பேரும் புகழும் கிடைக்குமா என்பதற்கு மாறாக பிரம்மாண்ட படங்களை இயக்கினாலும் எல்லாம் தான தேடி வரும் என்பதற்கேற்ப அனைத்து புகழையும் பெற்று பிரபலமாக ஜொலித்து வருகிறார் இயக்குனர் சங்கர். அந்த வகையில் அதிக சம்பளத்தை வாங்கும் இயக்குனர்களில் ஒருவராக இடம் பெற்றிருக்கிறார். இப்படி காசு பணம் வசதி எல்லாம் இருந்தாலும் இவருடைய மூத்த மகளால் கொஞ்சம் அவஸ்தைப் பட்டு தான் வருகிறார்.

அதாவது இவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு ஏற்கனவே கொரானா காலத்தில் கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவர் உடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் ரோகித் அவருடைய கோச்சிங் கிளாஸுக்கு வந்த பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதால் போக்சோ சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டார். இந்த செய்தி வெளியே பரவி வந்த நிலையில் சங்கரின் மகள் இனி இவருடன் வாழ முடியாது என்று தனியாக பிரிந்து வந்து விட்டார்.

அத்துடன் வந்த வேகத்தில் விவாகரத்தும் வாங்கி விட்டார். இதனால் மிகவும் கவலையில் இருந்த ஷங்கர் கொஞ்சம் கொஞ்சமாக இதிலிருந்து மீண்டு வந்து மகளுக்கு இரண்டாவது திருமணத்தை செய்து வைக்க நல்ல மாப்பிள்ளையை பார்த்து வைத்திருக்கிறார். இவர் யார் என்றால் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தவர். இவர் பெயர் தருண் கார்த்திகேயன் பெங்களூர் ஊரை சேர்ந்தவர்.

Also read: ரஜினியா இருக்க போய் பிரச்சனையிலிருந்து தப்பித்த சங்கர்.. கஷ்டத்தை கூட ஜாலியாக 4 பேரிடம் பகிர்ந்த சூப்பர் ஸ்டார்

இவருக்கும் சங்கருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டதால் மகளின் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கல்யாணம் பண்ணுவதற்கு முன் வந்திருக்கிறார். அதனால் இவருடைய திருமணத்திற்கு பிள்ளையார் சுழி போடும் விதமாக இரண்டு தினங்களுக்கு முன் ஞாயிற்றுக்கிழமை அன்று ஷங்கரின் மூத்த மகளுக்கு சென்னையில் இருக்கும் ஐடிசி (ITC) ஓட்டலில் நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து நிச்சயதார்த்தத்தை முடித்து வைத்திருக்கிறார்கள்.

மகளின் முதல் திருமணத்திற்கு அனைவரையும் கூப்பிட்டு மிக பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு பண்ணி வைத்த திருமணம் தான் கோணலாக அமைந்துவிட்டது. அதனால் இரண்டாவது திருமணத்தை காதும் காதுமாக வைத்து ரகசியமாக பண்ணிவிடலாம் என்று நிச்சயதார்த்தத்திற்கு பெருசாக பிரபலங்கள் யாரையும் கூப்பிடாமல் உறவினர்களை மட்டும் கூப்பிட்டு நடத்தி வைத்திருக்கிறார் இயக்குனர் சங்கர்.

Also read: ஐஸ்வர்யா ராய்க்கு பிளாக்பஸ்டர் ஹிட்டான 4 படங்கள்.. சங்கர் சூப்பர் ஸ்டாரை வைத்து விட்ட தூது

Trending News