Shankar : இயக்குனர் ஷங்கர் படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பை மொத்தமாக காலி செய்த படம் தான் இந்தியன் 2. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. இதனால் ஷங்கர் படத்தின் மீது இருந்த ஆர்வமும் ரசிகர்களுக்கு குறைய தொடங்கியது.
ஷங்கர் இந்தியன் 2 எடுத்த போதே தெலுங்கில் ராம்சரனை வைத்து கேம் சேஞ்சர் படத்தையும் எடுத்து வந்தார். இந்த இரு படங்களின் சூட்டிங் மாறி மாறி தான் ஷங்கர் எடுத்தார். இந்நிலையில் கேம் சேன்ஜரின் ரஃப் கட்டை ஷங்கர் பார்த்திருக்கிறார்.
அதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதற்காக ராம்சரனிடம் நான்கு அல்லது ஐந்து நாட்கள் ரீசூட் நடத்த வேண்டும் என கால்ஷீட் கேட்டிருக்கிறார். ஆனால் ஏற்கனவே கேம் சேஞ்சர் படத்தின் மொத்த ஷூட்டிங் முடித்து விட்டு ராம்சரண் அடுத்த படத்திற்கு சென்று விட்டார்.
ராம்சரனிடம் ஷங்கர் வைத்த வேண்டுகோள்
இப்போது புஜ்ஜி பாபு சனா உடைய புதிய படத்தில் ராம்சரண் கமிட்டாகி இருக்கிறார். அதற்கான படப்பிடிப்பு சென்று கொண்டிருப்பதால் இப்போது கேம் சேஞ்சர் படத்திற்கு நாட்கள் ஒதுக்க முடியாத நிலை இருக்கிறது. ஆனால் இந்தியன் 2 கொடுத்த மரண பயத்தால் ராம்சரனிடம் ஷங்கர் கெஞ்சி வருகிறாராம்.
எப்படியாவது ஒரு ஐந்து நாட்கள் மட்டும் ராம்சரண் கால்ஷீட் கொடுத்தால் கேம் சேஞ்சர் படத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையில் ஷங்கர் இருக்கிறார். இந்நிலையில் விரைவில் கேம் சேஞ்சர் படம் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் இப்போது மீண்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்பதால் கேம் சேஞ்சர் ரிலீஸ் தாமதமாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் ராம்சரணின் ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர்.
ஷங்கருக்கு பயத்தை காட்டிய இந்தியன் 2
- 2ஆம் பாகத்தால் ஷங்கரை போல் மோசம் போன 6 இயக்குனர்கள்
- இந்தியன் 2 ஷங்கர் படமே இல்ல
- அஜித்துக்காக பார்த்து பார்த்து செதுக்கிய ஷங்கர்