Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ஜூனியர் கேப்டனுக்கு தோள் கொடுத்த AI விஜயகாந்த்.. தியேட்டர் ஆரவாரம் எப்படி.? படைத்தலைவன் முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

ஜூனியர் கேப்டனுக்கு தோள் கொடுத்த AI விஜயகாந்த்.. தியேட்டர் ஆரவாரம் எப்படி.? படைத்தலைவன் முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

Padai Thalaivan Collection: இந்த வருட தொடக்கத்தில் வர வேண்டிய படைத்தலைவன் சில காரணங்களால் தள்ளி போய் நேற்று வெளியானது. அன்பு இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடித்துள்ள இப்படத்திற்கு தற்போது நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. பல வருட […]

Padai Thalaivan Collection: இந்த வருட தொடக்கத்தில் வர வேண்டிய படைத்தலைவன் சில காரணங்களால் தள்ளி போய் நேற்று வெளியானது. அன்பு இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடித்துள்ள இப்படத்திற்கு தற்போது நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

பல வருட இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் ஹீரோவாக தன் பயணத்தை தொடங்கி இருக்கிறார். ஆனால் இந்த முறை இன்னும் மெருகேரி ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களும் அவரிடம் இருக்கிறது.

சண்டை காட்சிகளில் அப்படியே கேப்டனை நினைவுபடுத்துகிறார். இதுவே படத்திற்கு மிகப்பெரும் பிளஸ். அதே போல் ஒரு காட்சியில் ஏஐ டெக்னாலஜி மூலம் ரமணா விஜயகாந்த் வந்து சர்ப்ரைஸ் கொடுக்கிறார்.

படைத்தலைவன் முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

அந்த காட்சிக்காகவே ரசிகர்கள் அடுத்தடுத்த காட்சியையும் பார்க்க தியேட்டருக்கு படையெடுக்கின்றனர். இப்படி ஆடியன்ஸ் ஆதரவை பெற்றுள்ள படத்தின் முதல் நாள் வசூல் பற்றி காண்போம்.

தமிழகத்தை பொறுத்தவரையில் படைத்தலைவன் 400 தியேட்டர்களில் வெளியானது. நேற்று விடுமுறை அல்லாத நாள் என்பதால் முதல் நாளில் இப்படம் 50 லட்சம் வரை வசூலித்துள்ளது.

ஆனால் வார இறுதி நாட்களில் இந்த வசூல் இன்னும் அதிகரிக்கும் என தெரிகிறது. இப்படத்தை அடுத்து கேப்டன் வாரிசு நிறைய படங்கள் பண்ண வேண்டும் என்ற வாழ்த்துக்களும் ஒரு பக்கம் குவிந்து வருகிறது.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.