ரத்தத் திலகம் படத்தின் மூலம் அறிமுகமாகி பல படங்களில் குணச்சித்திர வேடங்கள், துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் சண்முகசுந்தரம். இவர் தன்னுடைய 79 ஆவது வயதில் காலமானார். கங்கை அமரன் இயக்கத்தில் கரகாட்டக்காரன் படத்தில் கனகாவின் தந்தையாகவும், காந்திமதியின் தம்பியாகவும் சண்முகசுந்தரம் நடித்திருந்தார்.
இப்படத்தில் இவர் பேசும், அக்கா போலீஸ்காரர்கள் நெஞ்சில் ஏறி ஏறி மிதிக்கிறார்கள் என்ற வசனம் மிகவும் பேமஸ் ஆனது. இப்படி சீரியசான கதாபாத்திரத்தில் நடித்து வந்த சண்முக சுந்தரத்தை காமெடி பீசான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தார் வெங்கட்பிரபு.
சென்னை 600028: வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவா, ஜெய், பிரேம்ஜி, விஜய் வசந்த போன்ற பல நடிகர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் சென்னை 600028. இப்படத்தில் ஏமாறக்கூடிய, கிரிக்கெட் தெரியாத அரசியல்வாதியாக சண்முகசுந்தரம் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் இவர் பல இளைஞர்களின் கவனத்தைப் பெற்றார்.
சரோஜா: வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், வைபவ், பிரேம்ஜி, எஸ்பிபி சரண் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சரோஜா.சென்னை 600028 படத்தில் நடித்த பல நடிகர்கள் இப்படத்திலும் நடத்தி இருந்தனர். இப்படத்திலும் சில காட்சிகளில் சண்முகசுந்தரம் நடித்திருப்பார்.
கோவா: வெங்கட்பிரபு இயக்கத்தில் ஜெய், வைபவ், பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், சினேகா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கோவா. இப்படத்தில் பிரேம்ஜி சாமி கண்ணாக நடித்திருந்தார். இவருடைய தந்தையாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சண்முகசுந்தரம்.
மாஸ் என்கிற மாசிலாமணி: வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, பிரணிதா சுபாஷ், பிரேம்ஜி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ் என்கிற மாசிலாமணி. இப்படத்தில் சண்முகசுந்தரம் பேயாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பிரியாணி: வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா மோத்வானி, பிரேம்ஜி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பிரியாணி. இப்படத்தில் கார்த்தி சுகன் ஆக நடித்திருந்தார். இவருடைய தந்தை காசிவிசுவநாதன் ஆக சண்முகசுந்தரம் நடித்திருந்தார்.