விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா தொடரில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் அரங்கேறி உள்ளது. அதாவது இத்தொடரில் வில்லி வெண்பாவின் ஆட்டத்தை முடித்து வைப்பதற்காக ஒரு காலகட்டத்தில் வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரேகாயை வெண்பாவில் அம்மாவாக விஜய் டிவி இறக்கியுள்ளது.
ஷர்மிலாவாக வந்திருக்கும் ரேகாவால் பாரதிகண்ணம்மா தொடரில் பல அதிரடி திருப்பங்கள் வரக் காத்திருக்கிறது. சமீபத்தில் சௌந்தர்யாவின் நண்பர் விக்ரம் புதிதாக மருத்துவமனை திறப்பு விழா வைத்திருக்கிறார். இந்த மருத்துவமனையில் கண்ணம்மாவும் வேலை பார்க்கிறார்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு வெண்பாவும் அவரது அம்மா ஷர்மிளாவும் வருகிறார்கள். அங்கு எல்லோரிடமும் பாரதி, வெண்பா மற்றும் அவரது அம்மாவை அறிமுகம் செய்து வைக்கிறார். இந்நிலையில் சௌந்தர்யாவும், ஷர்மிளாவும் சந்தித்து பேசுகின்றனர். ஷர்மிளா வெண்பாவிற்கு கல்யாணம் பண்ண தான் இந்தியாவுக்கே வந்ததாக கூறுகிறார்.
அதற்கு சௌந்தர்யா ரொம்ப நல்ல விஷயம், நல்ல மாப்பிள்ளையா பார்த்து உடனே கல்யாணத்தை பண்ணுங்க. நல்ல படிச்சவ மாப்பிளையா கண்டிப்பா கிடைப்பாங்க ஏற்கனவே கல்யாணம் ஆன பையன், விவாகரத்தான பையன் எல்லாம் வேண்டாம். மேலும், இப்பயாவது வெண்பாவிற்கு கல்யாணம் பண்ணனும்னு உங்களுக்கு தோணுச்சு அதுவரைக்கும் சந்தோஷம் என்ன சௌந்தர்யா கூறுகிறார்.
இந்நிலையில் போலீஸ் அங்கு வந்து வெண்பாவை அழைத்து செல்ல முற்படுகிறது. அப்போது சர்மிளா எதற்கு என் பொண்ண அழைச்சிட்டு போறீங்க என கேட்க பெயில தான் இவங்க வெளியில் வந்து இருக்காங்க. இப்போ பெயில் கேன்சல் ஆயிடுச்சு, வெண்பாவை திரும்பவும் ஜெயிலில் போட ஆர்டர் வந்திருக்கு என போலீஸ் சொல்கிறார்.
மேலும் பெண்பாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு வந்த ஷர்மிளா உன்னை நான் பெயில எடுக்கிற ஆனா ஒரு கண்டிஷன் என கூறுகிறார். உன் கல்யாணத்துல நான் சொல்ற பேச்ச தான் நீ கேக்கணும் என கூறுகிறார். உடனே வெண்பா பாரதி என சொல்ல ஆரம்பிக்க, வாய மூடு என ஷர்மிளா கூறுகிறார்.
மேலும் இனிமே பாரதி என்ற பேச்சே எடுக்கக்கூடாது நீ பிடிவாதக்காரினா நான் அகம்பாவகாரி என ஒரே போடாகப் போடுகிறார் ஷர்மிளா. இதைக்கேட்டு வெண்பா அரண்டு போகிறார். இதனால் வெண்பாவிற்கு மிக விரைவில் திருமணம் ஆக வாய்ப்புள்ளது.