திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அடுத்த நயன்தாரா இவர் தான்.. திரிஷாவின் கனவை பாழாக்கிய பிரபல நடிகை

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனை திருமணம் செய்ததற்கு பின், பாலிவுட்டில் இயக்குனர் அட்லி இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தமிழில் தற்போது வரை நயன்தாரா எந்த ஒரு திரைப்படத்திலும் கமிட்டாகாமல் உள்ளார்.

இதனிடையே நயன்தாராவின் இடத்தை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகை திரிஷா, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்து வருகிறார். மேலும் தளபதி 67 திரைப்படத்திலும் நடிகர் விஜய்க்கு ஜோடியாக 16 வருடங்கள் கழித்து திரிஷா இணைந்து நடிக்கவுள்ளார்.

Also Read: உன் கூட அடுத்த படமா? தனுசுக்கு எந்த நடிகை மீது ஆசை, மேடையில் போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

இந்நிலையில் நடிகை திரிஷாவின் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் கனவை பறித்துக் கொள்ளும் விதமாக பிரபல நடிகை ஒருவர் வலம் வந்து கொண்டிருக்கிறார். பொதுவாக நயன்தாராவின் திரைப்படங்கள் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் கதைகளாகவே அமையும்.

அந்த வகையில் நயன்தாராவின் நடிப்பில் உருவாக வேண்டிய, கிட்டத்தட்ட நான்கு திரைப்படங்களின் கதை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் காதுகளுக்கு சென்று அவர் கமிட்டாகி உள்ளாராம். இதில் முக்கியமாக டிரேண்டிங் துர்கா என்ற திரைப்படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: ஹீரோ, ஹீரோயின்களுக்கு குட்டு வைத்த திரையுலகம்.. சமந்தா, நயன்தாராவுக்கு வச்ச ஆப்பு

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான, சூழல் வெப்சீரிஸ் பெண்களை மையப்படுத்திய கதையாக அமைந்து இணையத்தில் சக்கை போடு போட்டது. அடுத்தடுத்து பல பெண்கள் கதாபாத்திரம் அமையும் கதைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாராவிற்கு வந்த அனைத்து கதைகளும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சென்றுள்ளதாம்.

இந்நிலையில் நடிகை திரிஷாவின் அடுத்த லேடி சூப்பர்ஸ்டார் கனவை ஐஸ்வர்யா ராஜேஷ் சத்தமே இல்லாமல் பறித்து கொண்டு வருகிறார். இருப்பினும் திரிஷா நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் த்ரிஷாவின் மார்க்கெட் உயரும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Also Read: 2வது ஹனிமூனுக்கு பின் விக்னேஷ் சிவன் போட்ட கண்டிஷன்.. நயன்தாரா ஸ்டேடஸ்க்கு வைத்த ஆப்பு

Trending News