புதன்கிழமை, ஜனவரி 8, 2025

சூப்பர் ஸ்டாருடன் கிசுகிசுக்கப்பட்ட ஒரே நடிகை.. பெரும்புள்ளிகள் தலையிட்டு லதா-ரஜினி விவாகரத்திற்கு வைத்த முற்றுப்புள்ளி

42 வருடங்களாக திருமண இல்லற வாழ்க்கையில் சிறப்புடன் வாழும் ரஜினி-லதா இருவரை குறித்து அதிர்ச்சியான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டு கடந்த ஆண்டு இருவரும் மனம் ஒத்து பிரிவதாக அறிக்கையை வெளியிட்டனர்.

அதுமட்டுமின்றி இவர்களை இணைக்கும் முயற்சியில் இரு குடும்பத்தினரும் செயல்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது இதனால் இவர்கள் இரண்டு இருவரும் பிள்ளைகளுக்காக இணைந்து வாழலாம் என்ற முடிவில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Also Read: ரசிகர்களை முட்டாளாக்கும் தனுஷ், ஐஸ்வர்யா.. விவாகரத்து எல்லாம் நாடகமா?

இந்நிலையில் இப்பொழுது தனுஷ் ஐஸ்வர்யாவிற்கு ஏற்பட்ட பிரச்சனை போல் 30 வருடங்களுக்கு முன் ரஜினி லதாவிருக்கும் இதே பிரச்சனை வந்தது. பிரபல நடிகை ஒருவருடன் ரஜினி நிறைய படங்களில் நடித்தார. அந்த நடிகையும் ரஜினியையும் சேர்த்து வைத்து ஒரு கிசுகிசுக்கள் உலா வந்து கொண்டு இருந்தது.

ஊடகங்கள் இதை அனைத்தும் விஸ்வரூபமாக மாற்றியது. ரசிகர்கள் தினம் தோறும் போயஸ் கார்டனுக்கு வந்து, ‘தலைவா இப்படி பண்ணாதீர்கள்! இது நியாயம் இல்லை’ என்று ரஜினியிடம் கூறி வந்தனர். வேலைக்காரன், கொடி பறக்குது, மாவீரன் போன்ற படங்களில் அமலாவுடன் ஜோடி போட்டார் ரஜினிகாந்த்.

Also Read: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஹீரோவுக்கு வலைவீசிய தனுஷ்.. சினிமாவிலும் நீயா நானா போட்டு பார்த்துருலாம்!

அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் உடன் அமலாவை ஜோடி சேர்த்து பேசினர். ரஜினிக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்த கே பாலசந்தர் இந்த விவகாரத்தில் தலையிட்டு இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். ‘நீ இப்பொழுது தான் வளர்ந்து வருகிறார் இந்த நேரத்தில் இந்த மாதிரி கிசுகிசுக்கள் வரக்கூடாது’ என்று ரஜினிக்கு உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் ரஜினியை விட்டு பிரிந்து சென்றுவிடலாம் என்ற முடிவில் இருந்த லதாவையும் கே பாலசந்தர் சந்தித்து பேசி, சினிமாவில் இதெல்லாம் சகஜம் தான். நம்பிக்கையை மட்டும் கைவிடாதே என்று அறிவுரை சொல்லி இருக்கிறார். அதன் பிறகு ரஜினி, அமலா பக்கம் தலை வைத்துக் கூட படுக்க மாட்டாராம்.

Also Read: தனுஷ், ஐஸ்வர்யா மீது வழக்குப்பதிவு.. சர்ச்சையை உண்டாக்கிய படம்

Trending News