சினிமாவைப் பொறுத்தவரையில் நடிகைகள் எளிதில் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் ஹீரோயின்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்களது மார்க்கெட் உடனே சரிந்துவிடும். அதுமட்டுமின்றி படவாய்ப்புகளும் குறைந்து விடும். இதனால் 40 வயதை கடந்தும் பல நடிகைகள் சிங்கிள் ஆகவே சுற்றி வருகின்றனர்.
திருமணம் ஆனாலே இப்படி என்றால் அவர்கள் விவாகரத்து பெற்றால் மொத்தமும் போச்சு என்று தான் சொல்வார்கள். அதன் பிறகு ஹீரோயினாக நடிக்க முடியாது. அந்தகாலத்தில் ரோகினி, சீதா, நளினி போன்ற நடிகைகளுக்கு விவாகரத்துக்குப் பின்பு ஹீரோயின் வாய்ப்புகள் இல்லாமல் போனது.
சோனியா அகர்வால் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நிலையில் தனது பட இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்ற உடன் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. அதேபோல் அமலாபாலும் ஏ எல் விஜய்யை திருமணம் செய்து கொண்ட சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
இதனால் சுத்தமாக பட வாய்ப்பு இல்லாத அமலாபால் தற்போது ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் தற்போது வெற்றி படத்திற்காக போராடி வருகிறார். ஆனால் விவாகரத்திற்கு பிறகும் கொடிகட்டிப் பறக்கிறார் நடிகை சமந்தா. நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட சமந்தா நான்கு வருடங்களுக்குப் பிறகு அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.
மேலும் நாகசைதன்யாவிடம் இருந்த ஜீவனாம்சம் வேண்டாம் எனவும் சமந்தா கூறியிருந்தார். இவர் விவாகரத்துப் பெற்ற பிறகு படங்களில் அதிக கவர்ச்சியும் காட்டி வருகிறார். புஷ்பா படத்தில் சமந்தா நடனம் ஆடிய ஐட்டம் பாடல் வேற லெவல் ட்ரண்டானது. மேலும் விவாகரத்திற்கு பிறகு அவரது வளர்ச்சி அபரிவிதமாக உள்ளது. சமந்தாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.
கோலிவுட் சினிமாவில் நயன்தாராவுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இரண்டாம் இடத்தில் சமந்தா உள்ளார். மேலும் சமூகவலைதள பக்கத்திலும் சமந்தாவை ஏராளமானோர் பின்தொடர்கின்றனர். விவகாரத்திற்கு பிறகும் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் ஒரே ஹீரோயின் சமந்தா தான்.