ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

விஜய் டிவி கதாநாயகி ஷோவின் டைட்டில் வின்னர் இவர்தான்.. இழுத்து மூடிட்டு புதுசாக வரும் நிகழ்ச்சி

Vijay Tv: ரியாலிட்டி ஷோ என்றாலே அது விஜய் டிவி தான். அந்த அளவிற்கு சின்னத்திரை ரசிகர்களுக்கு பிடித்தமான புதுப்புது நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துகின்றனர். அதிலும் சமீபத்தில் துவங்கப்பட்ட கதாநாயகி என்ற நிகழ்ச்சியின் மூலம் புதிய சீரியலின் ஹீரோயினை தேடத் துவங்கினர்.

அதுமட்டுமல்ல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் சாதிக்கத் துடிக்கும் பலருக்கும் வாய்ப்புகளை அள்ளிக் கொடுப்பதில் விஜய் டிவியை அடித்துக் கொள்ள முடியாது. அப்படி தான் கதாநாயகி என்ற ஷோ மூலம் கடைக்கோடியில் இருக்கும் திறமை வாய்ந்த நடிகைகளை சல்லடை போட்டு சலித்தெடுத்தனர்.

Also Read: இந்த வார டிஆர்பி-யில் மாஸ் காட்டும் டாப் 6 சீரியல்கள்.. மற்ற சேனல்களை திணறடிக்கும் எதிர்நீச்சல்

இதற்கு நடுவர்களாக ராதிகா, கேஎஸ் ரவிக்குமார் இருவரும் இருந்து போட்டியாளர்களின் நடிப்புத் திறமையை மெருகேற்றினர். இந்த நிகழ்ச்சியின் செமி பைனல் கடந்த வாரம் நடந்து முடிந்த நிலையில், வரும் வாரத்தில் ஒளிபரப்பாக போகும் கிராண்ட் பினாலே ஷூட்டிங் தற்போது முடிவடைந்துள்ளது.

இதில் கதாநாயகி என்ற பட்டத்தை கைப்பற்றி உள்ள நாயகி யார் என்ற தகவல் உறுதியாகியுள்ளது. கோவையில் இருந்து கலந்து கொண்ட இரட்டை சகோதரிகள் ஆன ரூபீனா மற்றும் ரூபிஸினா இருவரும் தான் டைட்டிலை கைப்பற்றி உள்ளனர்.

Also Read: பிக் பாஸில் ஏழரை கூட்ட 7 போட்டியாளர்கள்.. ஆளே கிடைக்காததால் கோமாளியை தூக்கி விஜய் டிவி

இது மட்டுமல்ல இவர்கள் விஜய் டிவியில் புதிதாக துவங்க இருக்கும் சீரியலில் கதாநாயகியாகவும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றிருக்கின்றனர். கதாநாயகி ஷோ நிறைவடைந்த பிறகு அடுத்ததாக அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 7 துவங்கப் போகிறது.

இதன் காரணமாகத்தான் கதாநாயகி நிகழ்ச்சியை அவசர அவசரமாக நிறைவு செய்கின்றனர். இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றல்ல இரண்டு வீடு இருக்கப் போகிறது. இதில் புதிய, பழைய என 20 போட்டியாளர்களை களம் இறக்கி தரமான சம்பவத்தை செய்ய விஜய் டிவி திட்டமிட்டுள்ளது.

Also Read: அப்பாவை சந்தித்த போது விஜய் போட்ட முக்கிய கட்டளை.. உங்க சங்கார்த்தமே வேண்டாம் என எஸ்ஏசி எடுத்த முடிவு

Trending News