கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். சுராஜ் இயக்கத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த அந்த திரைப்படம் கடந்த வாரம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. இதன் மூலம் வைகை புயலை கொண்டாடுவதற்கு காத்திருந்த ரசிகர்களுக்கு இப்படம் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.
அந்த வகையில் இந்த திரைப்படம் தற்போது எதிர்பார்த்த அளவுக்கு வசூலை பெறாமல் தோல்வி பட வரிசையில் இணைந்திருக்கிறது. இந்தத் தோல்விக்கு சில முக்கிய காரணங்களும் இருக்கிறது. அதாவது இப்போது இருக்கும் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரியான, அவர்கள் ரசிக்கத்தக்க வகையிலான காமெடி காட்சிகள் எதுவும் படத்தில் துளி கூட இல்லை என்பது தான் உண்மை.
Also read: ஓவர் திமிரில் ஆடிய வடிவேலு.. 85 படங்களில் நடித்தும் கிடைக்காத அங்கீகாரம்
மேலும் இந்த படத்தின் திரைக்கதையும் பயங்கர சொதப்பலாக இருந்தது. அது மட்டுமல்லாமல் வடிவேலு பல வருடங்களுக்கு முன்பு எந்த காமெடியை வைத்து ரசிகர்களை கவர்ந்தாரோ அதே பாணியை தான் இப்பொழுதும் பின்பற்றி வருகிறார். அதனாலேயே இந்த திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்க்கவில்லை.
அந்த வகையில் வடிவேலு இப்போது இருக்கும் காலகட்டத்திற்கு ஏற்றவாறு தன்னை சுய பரிசோதனை செய்து கொண்டு காமெடி செய்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் அவர் ஹீரோ வேஷம் போடுவதை தவிர்த்து விட்டு முழு நேர காமெடியனாக களம் இறங்கினாலே அவருடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.
Also read: அஜித்தை எகத்தாளமாக பேசிய வடிவேலு.. ஒதுங்கிப் போனாலும் தேடி போய் வம்பிழுத்த வைகைப்புயல்
இவ்வாறு வடிவேலுவின் ரீ என்ட்ரி கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் நாய் சேகர் ரிட்டன்ஸ் கொடுத்த இந்த மரண அடி வடிவேலுவை கொஞ்சம் யோசிக்கவும் வைத்திருக்கிறது. ஏனென்றால் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கொடுத்து தற்போது மண்ணை கவ்வியுள்ள இந்த திரைப்படம் வடிவேலுவின் மார்க்கெட்டை கொஞ்சம் அல்ல நிறையவே இறக்கி விட்டது. இதனால் அவரை வைத்து படம் எடுப்பதற்கு நிறைய தயாரிப்பாளர்களும் தயங்கி வருகிறார்கள்.
அதிலும் அவர் தற்போது ஹீரோவாக நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் அவரை வைத்து இப்படி ஒரு ரிஸ்கை எடுப்பதற்கு எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை. அந்த வகையில் வடிவேலு இனிவரும் நாட்களில் கதையை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தினால் தான் தன்னுடைய மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் இருக்கிறார். மேலும் இந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல பாடத்தை உணர்த்தி இருக்கிறது.
Also read: முதல் கோணல் முற்றிலும் கோணல்.. அந்த ஒரு விஷயத்திற்கு அவமானப்பட்ட வடிவேலு, ஆனா பிரயோஜனமில்ல