புதன்கிழமை, ஜனவரி 22, 2025

உங்களுக்கு மார்க்கெட் இல்ல, அஜித் கூட நடிக்க மறுத்த நடிகை.. பின் சிம்ரனை பார்த்து காண்டான 90-களின் கனவுக்கன்னி

நடிகர் அஜித்தின் ஆரம்பகால சினிமா வாழ்க்கை அவருக்கு பல தோல்விகளை கொடுத்து வந்தது. இதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகள் கூட குறைந்தது. மேலும் முன்னணி நடிகைகள் பலரும் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க சற்று தயங்குவார்கள். ஏனென்றால் அஜித்துடன் நடித்தால் தங்களது மார்க்கெட் குறைத்திடுமோ என்ற பயம் அவர்களுக்கு இருந்தது.

இதையெல்லாம் கடந்து நடிகர் அஜித் தனது விடாமுயற்சியால் பல படங்களில் தொடர்ந்து நடித்து ஹிட்டானார். அதன் பின்னர் சிம்ரன், ரம்பா, ஜோதிகா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் அஜித்துடன் இணைந்து நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். அந்த சமயத்தில் நடிகர் அஜித்தின் இரட்டை வேட நடிப்பில் வெளியான வாலி திரைப்படம் செம ஹிட்டானது. எஸ்.ஜே. சூர்யா இயக்கிய இத்திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக சிம்ரன்,ஜோதிகா உள்ளிட்டோர் நடித்திருப்பர்.

Also Read: சிம்ரன், ஜோதிகா ரெண்டு குதிரைகளையும் ஒரே சமயத்தில் ஓட்டுற போல.. விஜய் சொன்னதாக சர்ச்சையை கிளப்பும் வாரிசு நடிகர்

இதில் சிம்ரனின் முதன்மை கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. இதனிடையே சிம்ரனின் நடிப்பை கண்டு பிரபல நடிகை ஒருவர் பொறாமைப்பட்ட நிகழ்வு அண்மையில் இணையத்தில் உலா வருகிறது. நடிகைகள் பலரும் தங்களது சக நடிகைகளுடன் சகஜமாக பழகுவது என்பது அரிதான ஒன்றே. இதன் காரணமாக அவர்களுக்குள் போட்டிகளும், பொறாமைகளும் வரும்.

அப்படியே அவர்கள் பொறாமைப்பட்டாலும் அதனை வெளியில் சொல்லாமல் இருப்பார்கள். ஆனால் 90 களில் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை மீனா சிம்ரனை பார்த்து பொறாமைப்பட்டதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். வாலி படத்தில் முதலில் நடிகை மீனா தான் சிம்ரனின் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அப்போது நடிகை மீனாவுக்கு கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த படத்தில் அவர் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

Also Read: வாலி படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட 3 நடிகைகள்.. கடைசியாக தேர்வான இடுப்பழகி சிம்ரன்

மேலும் படம் வெளியானவுடன் அனைத்து பாராட்டுகளும் சிம்ரனுக்கு சென்றபோது, நான் இருக்க வேண்டிய இடத்தில் இவர் இருக்கிறாரே என்று மீனா பொறாமைப்பட்டுள்ளாராம். மேலும் அஜித்துடன் எப்பட்டியாவது நடித்துவிட வேண்டும் என வில்லன் படத்தில் நடித்தாராம் மீனா. அப்படத்தில் மீனாவை விட நடிகை கிரனுக்கு கதை முக்கியத்துவம் இருந்தது. இதன் காரணமாக நடிகை மீனாவிற்கு பட வாய்ப்புகள் குறைய ஆராம்பித்த நிலையில், திருமணம் செய்துகொண்டு செட்டிலானார்.

நடிகை மீனா அண்மையில் தனது கணவரின் மறைவால் கவலையில் இருந்த நிலையில், மீண்டும் படப்பிடிப்புகளுக்கு சென்று வருகிறார். இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய்யின் நந்தினி கதாபாத்திரத்தை பார்க்கும்போது தனக்கு பொறாமையாக உள்ளது என்று மீனா வெளிப்படையாக தெரிவித்த நிலையில்,சிம்ரனை பார்த்தும் பொறாமைப்பட்ட நிகழ்வை வெளிப்படையாக பேசியுள்ளார்.

Also Read: கணவன் இறந்த ஒரு வருடத்திலேயே 2வது திருமணமா? அந்த தொந்தரவு தாங்காமல் மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு

Trending News