புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சமந்தாவை மிஞ்சிய நடிகை.. பாத்ரூமில் படு கேவலமான செயல்

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். இதை தொடர்ந்து பிக்பாஸ் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் ஷில்பா நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர் பிரபலமானார்.

தற்போது நட்டி நடராஜ் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். வேலன் புரோடக்சன் இப்படத்தை தயாரித்துள்ளது. மேலும் கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஸ்னீக் பிக் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது.

அதில் ஷில்பா மஞ்சுநாத் பாத்ரூமில் கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி, தம் அடிப்பது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அதாவது ஏற்கனவே ஓவியா, சமந்தா போன்ற நடிகைகள் இதுபோன்ற தம் அடிக்கும் காட்சியில் நடித்து இருந்தனர்.

அதாவது 10 என்றதுக்குள்ள படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்த சமந்தா சிகரெட் புகையை மூக்கின் வழியாக வெளியே விடுவார். இந்த காட்சியை தனது சமூக வலைத்தள பக்கத்திலும் சமந்தா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்களே புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளனர்.

ஆனால் தற்போது நடிகைகள் இது போன்ற காட்சிகளில் நடிப்பது மட்டுமல்லாமல் அதை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். அவ்வாறு தற்போது ஷில்பா மஞ்சுநாத் தனது இணையப்பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டு உள்ளார்.

இதைப் பார்த்து சமூக ஆர்வலர்கள் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு இயக்கங்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற காட்சிகள் பெண்களையும் புகை பிடிப்பதற்கு தூண்டுவது போல் உள்ளதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது.

Trending News