புதன்கிழமை, ஜனவரி 22, 2025

அன்னிக்கு body shaming.. இன்னிக்கு பல கோடிகளுக்கு அதிபதி.. பாலிவுட்டை திரும்பி பார்க்க வைத்த நடிகை

பெரிய வெற்றிகள் அடைய வேண்டும் என்றால், ஆரம்பத்தில் பல அடிகளை பட வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இன்று body shaming பற்றிய awareness இருக்கிறது. மக்கள், அதை புரிந்து கொண்டு சரியாக நடந்து கொள்கிறார்கள். உடல் ரீதியான விமர்சனங்களை முன்வைப்பதற்கு பயப்படுகிறார்கள்.

ஆனால் அந்த காலம் அப்படி இல்ல. இது ஒரு கேளிக்கை என்று நினைத்து உடல் ரீதியான விமர்சனங்களை முன் வைத்து, அதை பொழுது போக்காக நினைத்து வந்தனர். அப்படி பட்ட காலத்தில் இருந்த நடிகைகள், பலர் இப்படியான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தனர். அந்த லிஸ்டில் முக்கியமான நடிகையாக ஒருவர் இருந்தார்.

அவரது திரைப்பட வாழ்க்கையின் தொடக்கத்தில், அவர் தயாரிப்பாளர்களிடமிருந்து பல நிராகரிப்புகளை எதிர்கொண்டார். அவரது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில், அவர் நிறைய ஏமாற்றத்தையும் மனச்சோர்வையும் சந்தித்தார். இருப்பினும் அவர் முயற்சியை கைவிடவில்லை.

அவர் தனக்கு நடந்ததை பல ஊடங்களுக்கு தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது, “நான் கருமையாகவும், ஒல்லியாகவும், உயரமாகவும் இருந்தபடியே நடிப்பு தொழிலை தொடங்கினேன். பட்டப்படிப்பு முடிந்ததும் நான் என் தந்தையுடன் வேலை செய்ய விரும்பினேன். புதிதாகவும் சிறப்பாகவும் ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தாலும், அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை.”

ஆனால் அவர் வேடிக்கைக்காக ஒரு ஃபேஷன் ஷோவில் பங்கேற்றதால் நிலைமை மாறியது. ஒரு புகைப்படக் கலைஞர் என்னைப் பார்த்து படம் எடுக்கச் சொன்னார். அப்படித்தான் ஃபேஷன் துறைக்கு அறிமுகமானேன். அதன் பிறகு எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு திரும்பிப் பார்க்கவே இல்லை. நான் என் தொழிலில் தோல்விதான் ஏற்பட்டது. நான் நடிக்க வந்தபோது எனக்கு வயது 17. அப்போது நான் உலகத்தைப் பார்க்கவில்லை, வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவில்லை.”

“ஹிந்தியில் பேசத் தெரியாமல், கேமரா முன் நிற்பதை நினைத்து பதட்டமாக இருந்தது. சில படங்களுக்குப் பிறகு என் கேரியர் முடிவடையும் நிலையை அடைந்தேன். எந்த காரணமும் இல்லாமல் என்னை தங்கள் படங்களில் இருந்து கைவிடும் தயாரிப்பாளர்களும் இருந்தனர். அழகில்லை என்று பலர் நிராகரித்தார்கள். அனால் எதற்கும் நான் சோர்ந்து போக வில்லை ” என்று அந்த நடிகை கூறினார்.

அந்த நடிகையின் பெயர் ஷில்பா ஷெட்டி. கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கும். இவரையா அழகில்லை என்கிறார்கள் என்ற கேள்வி நமக்கு வரும். ஆம், இவரை தான் உயரம் கூட, உடல் அமைப்பு சரி இல்லை, அழகில்லை என்றெல்லாம் சொல்லி நிராகரித்தார்கள். ஆனால் அதை எல்லாவற்றையும் தாண்டி தனக்கான இடத்தை பிடித்தார் நடிகை ஷில்பா ஷெட்டி.

Trending News