திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மன்மதனாய் விளையாடிய ரஜினியை செல்லமாய் அடித்த சிவாஜி.. பிளேபாயா 2 ஜாம்பவான்களை மிரட்டிய சூப்பர் ஸ்டார்

Super Star Rajini: தமிழ் சினிமாவில் படிப்படியாக முன்னேறிய நடிகர்களுள் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் 80களில் வில்லனாக தனது திரைப்பயணத்தை துவங்கி அதன்பின் கதாநாயகனாக நடித்து, வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தவர்.

பெங்களூரில் சாதாரண கண்டக்டராக இருந்த ரஜினியின் ஸ்டைலை பார்த்து இயக்குனர் கே பாலச்சந்தர் தான் அவரை சினிமாவில் அறிமுகப்படுத்தி நல்ல நல்ல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தவர். தொடர்ந்து வெற்றிகளை ருசித்துக் கொண்டிருந்த ரஜினி, தன்னுடைய தனித்துவமான ஸ்டைலால் ஏகப்பட்ட ரசிகர்களை தன்வசப்படுத்தினார்.

Also Read: ரஜினியை அவர் இஷ்டம் போல் வாழ விடுங்க.. சூப்பர் ஸ்டாருக்கு கொடுக்கும் ஆதரவு, பதிலடி கொடுத்த லாரன்ஸ்

ஆனால் அந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரே மாதிரியான ரேங்கிங் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ‘இப்படி எல்லாம் நீ நடித்தால், பீல்டு டவுட் ஆகி விடுவாய்’ என இயக்குனர் பாலச்சந்தர் வேறு மாதிரி ரஜினியை நடிக்க சொன்னார்.

அப்படி ரஜினி நடித்த படம் தான் நெற்றிக்கண். எஸ்.பி. முத்துராமன் இயக்கிய இந்த படத்தில் மன்மதச் சக்கரவர்த்தியாக சக்கரவர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ரஜினிகாந்த். இதில் ரஜினி தந்தையாக சக்கரவர்த்தி கேரக்டரில் மட்டுமல்ல, மகனாகவும் சந்தோஷ் கேரக்டரில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தினார்.

Also Read: ரஜினி அரசியலுக்கு வர மாட்டார், இறைவன் தயவால் ஆளுநர் பதவி கிடைக்கும்.. பரபரப்பை கிளப்பிய உடன்பிறப்பு

1981 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை பார்த்த சிவாஜி மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் இருவரும் ரஜினிக்கு விருந்து கொடுத்து உபசரித்துள்ளனர். ‘படவா ராஸ்கல், மன்மதனாய் விளையாடிட்டியே!’ என்று சிவாஜி செல்லமாய் ரஜினியை அடித்துள்ளார்.

இந்தப் படத்திற்குப் பிறகு ரஜினிக்கு அடுத்தடுத்து சவால் நிறைந்த கதாபாத்திரங்கள் அமைந்த படங்கள் தான் குவிந்தது. இதனால் தான் அவருடைய மார்க்கெட் வெகு சீக்கிரமே உச்சம் பெற்றது. அதிலும் நடிகர் திலகமே இவருடைய நடிப்பை பார்த்து வியர்ந்த கதை இப்போது சூப்பர் ஸ்டார் ரசிகர்களால் ட்ரெண்ட் ஆக்கப்படுகிறது.

Also Read: 4 கார்களை ஆப்சனாக கொடுத்த கலாநிதி.. இதுதான் ஜாக்பாட் என கூச்சப்படாமல் வாங்கிய நெல்சன்

Trending News