புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிவாஜி காதலித்து திருமணம் செய்ய முடியாத நடிகைகள்.. ஜெயலலிதாவுக்கே ட்விஸ்ட் வைத்த நடிகர் திலகம்!

பத்மினி – சிவாஜியுடன் பத்தினி 1972 வரை தொடர்ந்து 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்கள் ஜோடியாக நடிக்கும் அனைத்து படங்களிலும் நெருக்கமாக நடித்து வந்தனர். பத்மினி தான் சிவாஜியை காதலித்தார் திருமணம் வரை செல்லும் என்று எதிர்பார்த்த இருவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

தேவிகா – சிவாஜி உடன் தேவிகா தொடர்ந்து 5 படங்களில் நடித்துள்ளார். இவர்கள் வரும் காதல் காட்சிகள் அப்போ உள்ள காலகட்டத்தில் ரசிக்கக் கூடியவையாக இருக்கும். இவர்கள் ஜோடி பிரமாதமாக அமைந்தது. இருவரும் மனதார காதலித்தனர் திருமணம் வரை சென்றும் எதுவும் நடக்காமல் இருவரும் பிரிந்தனர்.

சி ஐ டி சகுந்தலா – இவர் சிவாஜி உடன் ஒரு சில படங்களில் நடித்தாலும் சிவாஜிக்கு பிடித்த நடிகையாக இருந்தார். இருவரும் சில காலம் திருமணம் செய்யாமலையே காதல் வாழ்வில் ஈடுபட்டு வந்தனர் என கூறப்படுகிறது. இவர்களுக்கும் திருமணம் அமையவில்லை பிரிந்து விட்டனர்.

ஜெயலலிதாவுக்கே ட்விஸ்ட் வைத்த சிவாஜி

சந்தியா – ஜெயலலிதாவின் அம்மா சந்தியா இவர் ஒரு நடிகையாக இருந்துள்ளார் ஒரு சில படங்களில் சிவாஜி கணேசனுடன் நடித்துள்ளார். அப்பொழுதே இவர்களுக்குள் காதல் இருந்துள்ளது என கூறப்பட்டது. வயது வித்தியாசம் இருந்தால் எதுவும் தொடரவில்லை என்று கூறப்படுகிறது.

கே ஆர் விஜயா – இவர்களுக்கு ஜோடி பொருத்தமும் மிகப் பொருத்தமாகவும் அழகாகவும் இருந்தது. இவர்களுக்குள்ளும் காதல் இருந்தது என்று சொல்லப்பட்டது. இதுவும் திருமணம் வரை செல்லவில்லை காதலாகவே முடிந்தது.

இப்படி சிவாஜி கணேசன் தன்னுடன் நடித்த பல நடிகைகளுடன் காதல் என்று சொல்லப்பட்டாலும் இந்த ஐந்து நடிகைகளுக்கு மட்டுமே பத்திரிக்கையில் அதிக கிசுகிசுக்கள் வந்த நேரம் அது.

எது உண்மையோ பொய்யோ ஆனால் சிவாஜி கணேசன் தன் வீட்டில் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். அவருக்கு நடிகைகளை திருமணம் செய்வது என்பது நம்பிக்கை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தற்போது பல பத்திரிகையாளர்கள் பரபரப்பாக பேசி வருகிறார்கள்.

Trending News