சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

பிரசாந்த் பிரஸ்மீட்டில் நடந்த ஆச்சர்யம்.. காரணம் இல்லாமலா அப்படி நடக்கும்

வாரிசு நடிகர் என்ற அடையாளம் எல்லாம் அப்புறம்தான் என தமிழ் சினிமாவில் தன் திறமையால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்து இருந்தவர் நடிகர் பிரசாந்த். சில காலங்களுக்கு முன்பு வரை முன்னணி நடிகர்களின் பட்டியலில் இருந்து மாஸ் பண்ணினார்.

கடுமையான உழைப்பைக் கொடுத்து பிரசாந்த் நடித்த போதிலும் அந்த படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதற்கெல்லாம் முக்கிய காரணம் அவருடைய சொந்த வாழ்வில் ஏற்பட்ட சில சறுக்கல்களும், பிரச்சினைகளும் தான்.

ஆணழகனாக ஏகப்பட்ட பெண் ரசிகைகளை கொண்ட பிரஷாந்திற்கு சில பல பிரச்சனைகள் வந்தது. ஆனால் பிரஷாந்த் இப்போது அந்த பிரச்சினைகளை எல்லாம் கடந்து முழுவேகத்துடன் சினிமாவில் களம் இறங்க முடிவெடுத்துள்ளார்.

எல்லா திறமைகள் இருந்தும் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க தற்போது பல திரைப்படங்களில் கமிட்டாகி உத்வேகத்துடன் நடித்து வருகிறார். எப்படியாவது சினிமாவில் நான் விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பேன் என்று அவர் தன்னம்பிக்கையுடன் தயாராகிவிட்டார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு பிரஸ்மீட் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அந்த மீட்டிங்கில் முழுக்க முழுக்க பத்திரிக்கையாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 15 பத்திரிக்கையாளர்களை கொண்ட அந்தச் சந்திப்பில் பிரஷாந்த் 5 பவுன்சர்களோடு கலந்து கொண்டார்.

இதைப்பார்த்த பத்திரிகையாளர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சந்திப்பு நடப்பதோ பிரசாந்தின் இடத்தில்தான். அதில் கலந்து கொள்வது பத்திரிக்கையாளர்கள் மட்டுமே. அப்படியிருக்கும்போது பிரஷாந்த் எதற்காக இவ்வளவு பாதுகாப்போடு வரவேண்டும் என்று அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

முன்பெல்லாம் பிரசாந்த் பத்திரிக்கையாளர்கள் தோளில் கைபோட்டுக் கொண்டு பேசக்கூடிய நல்ல பண்பாளர். நடிகர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் அவர் பத்திரிகையாளர்களுடன் ஒரு நல்ல நண்பராக பழகுபவர். அப்படி இருப்பவர்க்கு இவளோ பவுன்சர்கள் ஏன் என அனைவரும் யோசித்து வருகின்றனர்.

Trending News