ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

மீண்டும் மீண்டும் விஜய் மானத்தை வாங்கும் எஸ்.ஏ.சி.. 78வது பிறந்த நாளின் ஷாக்கிங் புகைப்படம்

Actor Vijay: விஜய் மற்றும் அவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர் இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனை ஊர் உலகம் அறிந்தது தான். சிறு நெருப்பு காட்டு தீயாக மாறுவது போல சாதாரண அப்பா, மகன் பிரச்சனை இப்போது தன்மானப் பிரச்சனை ரேஞ்சுக்கு உருவெடுத்துள்ளது.

அதன்படி விஜய்யை குறை கூறுவதை மட்டுமே எஸ்.ஏ சந்திரசேகர் இப்போது வழக்கமாக வைத்துள்ளார். ஏற்கனவே வாரிசு படம் 300 கோடி எல்லாம் வசூலிக்கவில்லை என்று கூறி அதிர்ச்சியை கிளப்பினார். அதை தொடர்ந்து தற்போது தன் பிறந்த நாள் கொண்டாட்ட போட்டோவையும் வெளியிட்டு விஜய் மானத்தை வாங்கி இருக்கிறார்.

Also read: ஜெயிலரை ஓரங்கட்ட தயாராகும் லியோ.. நிற்க நேரமில்லாமல் பிசியான லோகேஷ்

அதாவது எஸ்.ஏ சந்திரசேகர் நேற்று தன்னுடைய 78வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் சீரியலில் இவர் நடித்து வருகிறார். அந்த குழுவினருடன் இவர் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோக்களும் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மேலும் தன் மனைவி ஷோபாவுடன் வீட்டில் எளிமையாக இவர் பிறந்தநாளை கொண்டாடிய போட்டோக்களும் தற்போது வெளியாகி உள்ளது. இதைப் பார்த்த பலரும் தன்னுடைய பிறந்தநாளுக்கும் விஜய் பெற்றவர்களை சந்திக்கவில்லை. அப்பாவின் பிறந்தநாளுக்கும் ஒரு வாழ்த்து கூட சொல்லவில்லையா என விமர்சித்து வருகின்றனர்.

Also read: பின்னணி பாடகர்களை மிஞ்சிய விஜய்.. தயாரிப்பாளர்களுக்கு செலவில்லாமல் பாடும் 6 நடிகர்கள்

அதுமட்டுமின்றி சமீபத்தில் விஜய் தன் அம்மா, அப்பாவின் 50வது திருமண நாள் அன்று அம்மா ஷோபாவை சந்தித்து போட்டோ எடுத்திருந்தார். அது கூட மீடியாவில் வெளியாகி வைரலானது. அப்போதே பலரும் எஸ் ஏ சந்திரசேகர் அந்த போட்டோவில் ஏன் இடம் பெறவில்லை என கேள்வி எழுப்பினார்கள்.

மனைவி ஷோபாவுடன் பிறந்தநாளை கொண்டாடிய எஸ்.ஏ சந்திரசேகர்

SA chandrasekar-shoba
SA chandrasekar-shoba

அந்த பரபரப்பு ஓய்ந்த நிலையில் தற்போது இந்த பிறந்தநாள் போட்டோக்கள் மூலம் அடுத்த சர்ச்சை கிளம்பி இருக்கிறது. இப்படி எஸ் ஏ சந்திரசேகர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் விஜய்யின் மானத்தை மீண்டும் மீண்டும் வாங்கி வருகிறார். இதைப் பார்த்த பலரும் அப்படி என்னதான் அப்பா, மகன் இருவருக்கும் பிரச்சனை என ஆதங்கத்தோடு கேட்டு வருகின்றனர்.

Also read: ஹீரோக்களால் அலைக்கழிக்கப்பட்ட 5 இயக்குனர்கள்.. வெங்கட் பிரபுவை முழு கண்ட்ரோலில் தூக்கிய தளபதி

Trending News