எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மயிலு என்ற கேரக்டர் தான் ஸ்ரீதேவியின் அடையாளமாக இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கொடி கட்டி பறந்த இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமண நிகழ்வுக்காக துபாய் சென்றபோது ஹோட்டல் அறையிலேயே மரணமடைந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்தது. அதாவது திருமணம் முடிந்த கையோடு போனி கபூர் தன் இரண்டாவது மகளை அழைத்துக் கொண்டு இந்தியாவுக்கு வந்துவிட்டார். ஆனால் ஸ்ரீதேவி மட்டும் தன் மூத்த மகளுக்கு சில பொருட்கள் வாங்க வேண்டும் என்று அங்கேயே தங்கியிருக்கிறார். அதை தொடர்ந்து போனி கபூர் மீண்டும் துபாய் சென்றபோதுதான் ஸ்ரீதேவியின் மரணம் நிகழ்ந்துள்ளது.
அது மட்டுமல்லாமல் அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கையில் முதலில் அவருக்கு மாரடைப்பு என்று கூறப்பட்டது. பிறகு குளியல் தொட்டியில் தவறி விழுந்ததால் மரணம் என்று சொல்லப்பட்டது. இதுவும் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியது. அதற்கேற்றார் போல் விசாரணையில் போனி கபூரின் பேச்சும் முன்னுக்கு பின் முரணாக இருந்திருக்கிறது.
இதனாலேயே ஸ்ரீதேவிக்கு என்ன நடந்தது என தெரிந்து கொள்ள ரசிகர்கள் துடியால் துடித்தனர். பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் கூட இது குறித்து நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று மனு போட்டிருந்தார். அவர் குடும்ப உறுப்பினர் இல்லாத காரணத்தால் அதுவும் நிராகரிக்கப்பட்டது. இருந்தாலும் அவர் பணத்திற்காக தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று பலரும் உறுதியாக நம்பினர்.
Also read: ரஜினியை புறக்கணித்து கமலிடம் தஞ்சமடைந்த நடிகை.. அம்மா சிபாரிசு செய்தும் பலிக்காத பாட்சா
ஏனென்றால் ஸ்ரீதேவி தன் பெயரில் கிட்டத்தட்ட 250 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் எடுத்திருக்கிறார். அதன்படி அரபு நாடுகளில் அவர் இறந்தால் மட்டுமே அந்த பணம் கைக்கு கிடைக்கும். அதனாலேயே மும்பை நிழல் உலக தாதாவை வைத்து இப்படி ஒரு சம்பவம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கைகளும் அவருடைய மரணம் இயற்கையானது இல்லை என்று தான் சொல்கிறது.
பிரேத பரிசோதனை அறிக்கை
மேலும் அவருடைய உடலில் போதைப்பொருள் இருந்ததாகவும், தலை உள்ளிட்ட மூன்று இடங்களில் காயம் இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அது ஒரு பொய்யான சான்றிதழ் என்றும் உண்மையில் அவருடைய இறப்பு குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்ததால் மட்டுமே என்று மற்றொரு ரிப்போர்ட்டும் வெளிவந்தது. இதில் எது உண்மை என்றுதான் தெரியவில்லை. இதைத்தான் பல மீடியாக்களும் இப்போது வரை விவாதித்துக் கொண்டு இருக்கிறது.
அதில் பிரபல யூடியூப் சேனல் ஒன்று இந்த விஷயத்தை பற்றி கூறி மீண்டும் சிபிஐ விசாரணை நடந்தால் மட்டுமே ஸ்ரீதேவிக்கு நியாயம் கிடைக்கும் என்று கூறியிருக்கிறது. அதற்கு ரசிகர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அந்நிய மண்ணில் அநியாயமாய் இறந்து போன இந்த மயிலின் இறுதி நிமிடங்கள் பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது.
Also read: ராக்கி கட்டியவர் கையால் தாலி கட்டிக் கொண்ட நடிகை.. கெட்ட பெயர் வந்தாலும் நினைத்ததை சாதித்த அம்மணி