Survey Report: தேர்தல் நெருங்கி விட்டதால் பிரச்சாரங்களும் சூடு பிடித்துள்ளது. வர இருக்கும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ல் தொடங்கி ஏழு கட்டமாக நடைபெற இருக்கிறது.
அதனால் மக்களின் ஆதரவை சம்பாதிக்க தலைவர்கள் நீ நான் என போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதே சமயம் இந்த தேர்தலில் ஜெயிக்கப் போவது யார் என்ற கருத்துக்கணிப்புகளும் தொடங்கியுள்ளது.
அந்த வகையில் தற்போது லோக் நிதி CSDS நடத்திய சர்வேயில் ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் தான் குவிந்துள்ளது. அதிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஊழல் தலை விரித்து ஆடுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி கிராமப்புறங்களில் நடந்த சர்வேயில் 55% பேர் ஊழல் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர். 19% பேர் ஊழல் குறைந்துள்ளதாகவும் 18% பேர் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சி கொடுத்த சர்வே ரிப்போர்ட்
மேலும் நகர்ப்புறங்களில் எடுத்த கருத்துக்கணிப்பில் 53% பேர் ஊழல் அதிகரித்துள்ளதாகவும் 19% பேர் குறைந்துள்ளதாகவும் 23 சதவீதம் பேர் மாற்றம் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
மாநகரங்களை எடுத்துக் கொண்டால் 57% பேர் ஊழல் அதிகரித்துள்ளதாகவும் 19% குறைந்துள்ளதாகவும் 16 சதவீதம் மாற்றமில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இதிலிருந்து ஆளும் கட்சி கடும் அதிருப்தியை சம்பாதித்துள்ளது என தெரிகிறது. மேலும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு என மக்கள் நிறைய சவால்களையும் சந்தித்து வருகின்றனர்.
மேலும் இந்த கருத்து கணிப்பை பார்த்த முதல்வர் மு க ஸ்டாலின் கூட பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சி தோல்வி அடைந்து விட்டதாக கூறியுள்ளார்.
அந்த வகையில் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.